புதிய மாருதி எர்டிகா கார் பற்றி அறிந்து கொள்ளலாம்

எம்பிவி வாகனங்களில் பிரபலமாக விளங்கும் மாருதி நிறுவனத்தின் மாருதி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட 2018 மாருதி எர்டிகா காரின் மைலேஜ் உட்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டிசைன்

சுசூகி நிறுவனத்தின் Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனையில் உள்ள மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்ட்ர் முகப்பு விளக்குக்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலின் அளவுகளை பெற்றிருந்தாலும் ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக மட்டும் குறைக்கபட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மாருதி டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவ அம்சங்களை பெற்று மிக நேர்த்தியான இருக்கை மற்றும் தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.

என்ஜின்

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.

103 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

89 bhp வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

மைலேஜ்

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்)

எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)

எர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ

வசதிகள்

புதிய மாருதி எர்டிகா கார் முந்தைய மாடலை விட பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் வழங்கப்பட்டு டாப் மாடல்களில் மாருதி ஸ்மார்ட்பிளே அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, 15 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டு விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

விற்பனையில் உள்ள பிரபலமான டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, ரெனோ லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி மற்றும் மிக வேகமாக விற்பனை ஆகி வரும் பிரசத்தி பெற்ற புதிய மஹிந்திரா மராஸோ உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மாருதி எர்டிகா எதிர்கொண்டு மாருதி அரேனா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

விலை

வருகின்ற நவம்பர் 21ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி சுசூகி எர்டிகா கார் ஆரம்ப விலை ரூ. 7 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share