Automobile Tamil

2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.!

வருகின்ற பிப்ரவரி 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய அளவிலான மாறுதல்களை மட்டும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தற்போதைய மாடலின் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் எண்டேவரில் முன்பக்க பம்பர், கிரில், ஹெடைலைட் அமைப்பு மற்றும் 18 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் கொண்டதாக விற்பனைக்கு வரக்கூடும்.

இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டு தோற்றம் புதுப்பிக்கப்பட்டு, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புதிய ஃபோர்டு Sync3 அம்சத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ஹேன்ட்ஸ்ஃபிரி டேயில் கேட் அம்சத்தை பெற்றிக்க வாய்ப்புள்ளது.

2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும்.  2 வீல் டிரைவ் கொண்டு 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

சர்வதேச அளவில் கிடைக்கின்ற 2.0 லிட்டர் மாடல் இந்திய சந்தையில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. எண்டேவர் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வந்துள்ளது. இந்த எஞ்சின் இரண்டு விதமான ஆற்றல் நிலையில் கிடைக்க உள்ளது. 180 ஹெச்பி ஆற்றல் மற்றும் 420 என்எம் டார்க் வழங்குவதுடன், மற்றொரு தேர்வில் ட்வீன் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட 213 ஹெச்பி ஆற்றல் மற்றும் 500 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்சூனர், மஹிந்திரா அல்டுராஸ், இசுசூ MU-X, மிட்ஷூபிசி பஜெரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக ஃபோர்டு எண்டேவர் விளங்க உள்ளது.

Exit mobile version