Home Car News

4.19 லட்சம் ரூபாய்க்கு 2019 மாருதி சுஸூகி வேகன்ஆர் வாங்கலாம்

 

முந்தைய மாடலை விட புதிய 2019 மாருதி சுஸூகி வேகன்ஆர் கார் 4.19 ரூபாய் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் வேகன்ஆர் கிடைக்கின்றது.

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான மாருதி சுஸூகி வேகன்ஆர் கார் விற்பனை 22 லட்சத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. முந்தைய மாடலை விட மிக சிறப்பான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

மாருதி சுஸூகி வேகன்ஆர்

ஐந்தாவது தலைமுறை Heartech பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாருதி சுஸூகி வேகன்ஆர் காரின் முன்புற அமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் ஹெட்லைட் அம்சத்தை பெற்று விளங்குகின்றது.

மாருதியின் வேகன்ஆர் கார் நீளம் விற்பனையில் இருந்த இரண்டாம் தலைமுறை மாடலை விட சுமார் 65 மிமீ கூடுதலாக அதிகரிக்கப்பட்டு, 3655 மிமீ நீளம் பெற்றுள்ளது. இதைத் தவிர அகலம் 140 மிமீ அதிகரிக்கப்பட்டு 1620 மிமீ ஆகவும், ஆனால் வாகனத்தின் உயரம் 25 மிமீ குறைக்கப்பட்டு 1625 மிமீ ஆக வெளிவந்துள்ளது.

இந்த காரின் அளவு மாற்றங்களின் முக்கிய காரணமே தாரளமான இடவசதியை வழங்கும் நோக்கில் வீல்பேஸ் 35 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 2435 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பூட் ஸ்பேசில் அதிகப்படியான பொருட்களை வைக்கும் வகையில் கூடுதலான இடவசதியை வழங்கும் நோக்கில் 341 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையில் இருந்த மாடலில் 172 லிட்டர் மட்டும் கொண்டிருந்தது. புதிய வேகன்-ஆர் மாடலில் நீலம், ஆரஞ்சு நிறங்கள் புதிதாக இணைக்கப்பட்டு வெள்ளை, சில்வர், கிரே மற்றும் பிரவுன் என மொத்தமாக 6 நிறங்களில் கிடைக்க உள்ளது.

வேகன்ஆர் காரின் டாப் வேரியன்டில் 7 இன்ச் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, புளூடூத் , யூஎஸ்பி தொடர்பு, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் , கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸூகி வேகன்ஆர் என்ஜின்

விற்பனையில் உள்ள மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் வேகன்ஆர் வெளியிடப்பட்டுள்ளது. மாருதியின் ஏ.ஜி.எஸ். எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 21.5 கிமீ ஆகும்.

முந்தைய 1.0 லிட்டர் என்ஜினை விட 10 சதவீத சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.0 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.1 கிமீ ஆகும்.

வேகன்ஆர் வேரியன்ட் விபரம்

புதிதாக வெளியாகவுள்ள 2019 வேகன் ஆர் காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கும் சேர்த்து மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

அனைத்து வேரியன்டிலும் டூயல் ஏர்பேக் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர்பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன்ஆரின் போட்டியாளர்கள்

மாருதி சுசூகி வேகன்-ஆர் காருக்கு போட்டியாக டட்சன் கோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸூகி வேகன்ஆர் விலை பட்டியல்

வேகன்ஆர் 1.0 விலை பட்டியல்

LXi – ரூ.4.19 லட்சம்

VXi – ரூ.4.69 லட்சம்

VXi AGS – ரூ.5.16 லட்சம்

வேகன்ஆர் 1.2 விலை பட்டியல்

VXi – ரூ.4.89 லட்சம்

VXi AGS – ரூ.5.22 லட்சம்

ZXi – ரூ.5.36 லட்சம்

ZXi AGS – ரூ.5.69 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Maruti Suzuki WagonR Image Gallery

 

Exit mobile version