டாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

tata nexon kraz

1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்ததை முன்னிட்டு டாடா நெக்ஸான் க்ராஸ் எடிஷன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த க்ராஸ் போல இந்த ஆண்டும் பல்வேறு சிறப்புகளை பெற்று பண்டிகை காலத்துக்கு முன்பாகவே விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நெக்ஸான் கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்குகிறது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களில் தேர்வு செய்யலாம்.

10 விதமான சிறப்புகளை பெற்றுள்ள க்ராஸ் எடிஷனில் சோனிக் சில்வர் நிறத்தைப் பெற்ற கூரையுடன் புதிய டிராம்சோ கருப்பு வண்ணத்துடன் வந்துள்ள இந்த எஸ்யூவி ORVM, முன்புற கிரில் மற்றும் அலாய் வீல்களில் மாறுபட்ட டேன்ஜரின் (லைம் கிரீன்) உடன் கூடிய சிறப்பம்சங்களைப் பெறுகிறது. டெயில்கேட்டில் கிராஸ் பேட்ஜ் உள்ளது.

உள்ளே, எஸ்யூவி எக்ஸ்டீரியர் நிறத்துக்கு இணையாக மாறுபட்ட தையலுடன் இருக்கைகளில் அதே டேன்ஜரின் கொண்டுள்ளது, பியானோ பிளாக் ஆனது டாஷ்போர்டு, டோர், கன்சோல் ஃபினிஷர்கள் மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ளது.

சர்வதேச NCAP சோதனையில் 5 நட்சத்திரத்தைப் பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் கிராஸ் எடிஷனில் ரூ. 7.58 முதல் ரூ. 8.18 லட்சம் வரை பெட்ரோல் மாடலும்,  ரூ.8.48 முதல் ரூ.9.18 லட்சம் டீசல் வெர்ஷனில் கிடைக்கின்றது.

Kraz (Petrol, MT) – Rs. 7,57,702/-
Kraz (Diesel, MT) – Rs. 8,48,205/-
Kraz+ (Petrol, AMT) – Rs. 8,17,703/-
Kraz+ (Diesel, AMT) – Rs. 9,18,2015/-

(all prices ex-showroom, Delhi)

Exit mobile version