Automobile Tamilan

Toyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்

0624c 2019 toyota camry

இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட்

முதைய மாடலை விட விலை குறைவாக வந்திருந்தாலும் மிக சிறப்பான வசதிகளை பெற்ற வந்துள்ள கேம்ரி கார், டொயோட்டாவின் Toyota’s New Global Architecture (TNGA-K) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட 8வது தலைமுறை மாடலாக டொயோட்டா கேம்ரி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹைபிரிட் தேர்வில் மட்டும் கிடைக்கின்ற கேம்ரி காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  175 HP மற்றும் 221 Nm டார்க் வழங்குவதுடன், இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 120 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் ஆக மொத்தமாக கேம்ரி ஹைபிரிட் மாடலின் பவர் 218 ஹெச்பி ஆகும். இந்த வாகனத்தில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு  23.27 கிமீ ஆகும்.

இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் 8 அங்குல ஹூயுமன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. டிரைவர் இருக்கை மெமரி வசதியுடன், 9 ஜேபிஎல் டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள், ஹெட்ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.  பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் டொயோட்டா எவ்வித சமரசமும் மேற் கொள்ளாது. எனவே 9 ஏர்பேக் ஏபிஎஸ், இபிடி போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட், மற்ற மாடல்களான பஸாத் மற்றும் சூப்பர்ப் ஆகிய மாடல்களை கேம்ரி எதிர்கொள்கின்றது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விலை ரூ.36.95 லட்சம் ஆகும்.

Exit mobile version