Automobile Tamilan

ரூ.2.83 லட்சத்தில் 2020 டட்சன் ரெடி-கோ விற்பனைக்கு வெளியானது

பட்ஜெட் விலை கார்களில் ஒன்றான டட்சன் ரெடி-கோ காரின் பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற மேம்படுத்தப்பட்ட மாடல் ரூபாய் 2.83 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 4.77 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

க்விட் மற்றும் ரெடி-கோ கார்கள் ஒரே பிளாட்ஃபாரமில் வடிவமைக்கப்பட்டு 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ளது. இதில் இரு என்ஜினும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் கூடுதலாக 5 வேக ஏஎம்டி கியர்பாக்சினை கொண்டுள்ளது.

பிஎஸ் 6 இன்ஜின் பவர் மற்றும் மைலேஜ் விபரம்

1.0 லி மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999 சிசி பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்ற காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ள மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிமீ ஆகும்.

அடுத்ததாக குறைந்த விலை 0.8 லிட்டர் இன்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு அதிகபடசமாக 54 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 72 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்ற காரின் மைலேஜ் லிட்டருக்கு  20.7 கிமீ ஆகும்.

2020 டட்சன் ரெடி-கோ மாற்றங்கள் என்ன ?

வெளிப்புற தோற்ற அமைப்பில் குறிப்பாக முகப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய கிரில், பம்பர் அமைப்பு, எல்இடி ரன்னிங் விளக்குகள் ரெடி-கோ காருக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்குகின்றது. அதேபோல பக்கவாட்டில் டாப் வேரியண்டில் இரட்டை நிற புதிய அலாய் வீல் டிசைன் வீல் கவர் மற்றும் பிரவுன், நீலம் என இரு புதிய நிறங்களை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு டாப் வேரியண்டில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. ரியர் பார்க்கிங் கேமரா, புதிய ஃபேபரிக் இருக்கைகள் மற்றும் சில்வர் மற்றும் கிரே இன்ஷர்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை அடிப்படையான டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி போன்றவை இணைக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள கிராஷ் டெஸ்ட் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சத்தைப் பெற்றுள்ளது.

2020 டட்சன் ரெடி-கோ விலை பட்டியல்

D – ரூ. 2.83 லட்சம்
A – ரூ. 3.58 லட்சம்
T – ரூ. 3.80 லட்சம்
T(O) 0.8 l – ரூ. 4.16 லட்சம்
T(O) 1.0 l – ரூ. 4.44 லட்சம்
T(O) 1.0 l AMT – ரூ. 4.77 லட்சம்

முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.54,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏஎம்டி மாடல் ரூ.40,000 வரை உயர்ந்துள்ளது.

Exit mobile version