Automobile Tamilan

புதிய ஹோண்டா ஜாஸ் (ஃபிட்) காரின் படம் வெளியானது

ஜாஸ் டீசர்

46வது டோக்கியா மோட்டார் ஷோவில் வெளியாக உள்ள புதிய ஹோண்டா ஜாஸ் அல்லது ஃபிட் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷாகவும், கூடுதலான இடவசதி பிரீமியம் ஆப்ஷன்களை கொண்டதாக வரவுள்ளது. வெளியான படத்தின் தோற்றம் ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டதாகும்.

பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் உள்ள தோற்ற அமைப்பில் இருந்து மாறுபட்டதாக காட்சிக்கு கிடைத்துள்ள ஜாஸ் காரின் தோற்றம் மிக நேர்த்தியாக உள்ளதை உறுதி செய்கின்றது. புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் முந்தைய மாடலை விட மாறுபட்ட வடிவத்தில்  வட்ட வடிவ எல்இடி அம்சத்துடன் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.  முன்புற பம்பர் மற்றும் கிரில் அமைப்பு மாற்றப்பட்டு, நேர்த்தியான ஹோண்டா லோகோ மத்தியில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்டிரியர் அமைப்பில் புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்டத்துடன், புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் மிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக இந்த கார் விளங்க உள்ளது.

ஐரோப்பா சந்தையை பொருத்தவரை இந்த காரில் இரண்டு மோட்டார் ஹைபிரிட் செட்டப் உடன் கூடிய என்ஜினாக அறிமுகம் செய்யப்படலாம். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஹைபிரிட் அல்லது வெறும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் பிஎஸ் 6 மாசு உமிழ்வினை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 2020 ஹோண்டா சிட்டி கார் வெளியாக உள்ளதை தொடர்ந்து புதிய ஜாஸ் வெளியாகலாம். சிட்டி காரின் அதே பிளாட்பாரத்திலே ஜாஸ் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

image source – autoblog.rs

Exit mobile version