Automobile Tamilan

புதிய ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய WR-V ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிராஸ்ஓவர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடுத்த மாதம் அல்லது இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. முந்தைய மாடலைவிட மிகவும் ஸ்டைலிஷான அம்சங்களை கொண்டுள்ள இந்த கார் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

டபிள்யூ-ஆர்வி காரின் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் மிகவும் நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் பெற்று கருப்பு நிறத்திலான பாடி கிளாடிங் இணைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக தோற்றம் மாற்றங்கள் இல்லை.

மேலும், இந்த காரில் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் அமைப்பானது சில ஸ்டைலிங் அம்சங்களை பெற்றிருக்கும். ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட் காரில் 110 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும்.இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற வாய்ப்புள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்த கிராஸ் ஓவர் காருக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பெரும்பாலான காம்பேக்ட் எஸ்யயூவி உடன் சந்தையை பகிர்ந்து கொள்கின்றது. குறிப்பாக மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களை எதிர்கொள்கிறது.

Exit mobile version