Automobile Tamil

2022 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

முதன்முறையாக இந்தோனேசியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள 2022 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன்,இன்டிரியரில் கூடுதல் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்காசியாவில் ஹூண்டாய் குழுமத்தின் முதல் தொழிற்சாலை இந்தோனேசியா நாட்டில் துவங்கப்பட்டுள்ளதால் முதல் மாடலாக கிரெட்டாவை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சான்டா க்ரூஸ் மற்றும் புதிய டூஸான் கார்களில் காணப்படுகின்ற அதே போன்ற கிரில் அமைப்பினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கிரெட்டா காரில் முன்புற பம்பர், ஹெட்லைட் அமைப்பில் மட்டும் சிறிய அளவில் மாற்றங்களை கொண்டிருக்கும். பக்கவாட்டு தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பம்பரில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள கிரெட்டா மற்றும் அல்கசார் போன்ற காரில் உள்ளதை போன்ற இன்டிரியரை கொண்டிருக்கின்றது. கூடுதலாக சில கனெக்கடிவ் வசதிகளை பெறுவது, இந்தோனேசியாவின் சந்தைக்காக ADAS நுட்பத்தை பெற வாய்ப்புள்ளது.

இந்தோனேசியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமே இடம்பெறும். இந்தியாவில் தற்போது கிடைக்கின்ற என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது.

விரைவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தையில் 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version