Automobile Tamilan

2022 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரின் அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 16, 2022 வென்யூ காம்பாக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் இந்திய திட்டமிட்டுள்ளது. கூடுதலாக ஹூண்டாய் கார் நிறுவனம் இந்திய சந்தையில் பெர்ஃபாமென்ஸ் ரக வென்யூ N-Line மாடலை அறிமுகப்படுத்தும். கடந்த 2019 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ மூன்று வருடங்களுக்கு பிறகு மேம்பட்டுள்ளது.

இப்போது மிட் லைஃப் ஃபேஸ்லிஃப்ட் வரவுள்ளது. காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, இந்நிறுவனம் வடிவமைப்பு படத்தை வெளியிட்டுள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூவை பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்கள் ஏற்கனவே ₹ 11,000 கட்டணமாக அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு துவங்கியுள்ளனர்.

2022 Hyundai Venue

முன் மற்றும் பின்புறத்தில் பல ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ள Venue காரில் பெரும்பாலான பாடி பேனல்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. முன்பக்கத்தில், டார்க் குரோம் உடன் புதிய முன்பக்க பம்பர் மற்றும் கிரில்லை பெறுகிறது. புதிய வென்யூவின் கிரில்லின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, வெளிநாட்டில் விற்கப்படும் ஹூண்டாய் பாலிசேட் எஸ்யூவியை பிரதிபலிக்கிறது.

புதிய வெனியூவில் அலாய் வீல்கள் மற்றும் வீல் கேப்களைத் தவிர, பக்கவாட்டில் மாற்றங்களை பெறவில்லை.

டெயில்கேட்டின் மையத்தில் முக்கியமாக பேட்ஜிங்குடன் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்களுடன், வென்யூ ஃபேஸ்லிஃப்ட் சற்று மாற்றப்பட்ட டெயில் லேம்ப் வடிவமைப்பைப் பெறும் பின்புறத்தில் அதிக ஸ்டைலிங் மாற்றங்கள் காணப்படுகின்றன.
டெயில்கேட் வடிவமைப்பு மற்றும் பின்புற பம்பர் சிறிய வடிவமைப்பு மாற்றங்களையும் பெற்றுள்ளன.

இன்டிரியர் தொடர்பான படங்களை ஹூண்டாய் வெளியிடவில்லை.

புதிய ஹூண்டாய் வென்யூ காரின் அதே பவர் ட்ரெய்ன் கொண்டிருக்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7 லட்சம் முதல் துவங்கலாம்.

Exit mobile version