Automobile Tamilan

டாப் வேரியண்ட் சிட்ரோன் C3 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற C3 எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகளை பெற்ற ஷைன் டாப் வேரியண்ட்டை விற்பனைக்கு சிட்ரோன் கொண்டு வந்துள்ளது. C3 எஸ்யூவி காரின் விலை ₹ 6.16 லட்சம் முதல் ₹ 8.25 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள C3 எஸ்யூவி காரின் குதிரைத்திறன் 100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் PURETECH 110 இன்ஜின் கொடுக்கப்பட்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

கூடுதலாக 80 bhp குதிரைத்திறன் மற்றும் 115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் PURETECH 82 இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

2023 Citroen C3 SUV

2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நகர்புற கார் (Urban Car) என்ற விருதினை பெற்றுள்ள சிட்ரோன் C3 எஸ்யூவி காரில் புதிதாக வந்துள்ள வேரியண்ட் உடன் சேர்த்து, Live, Feel, Shine என மூன்று விதமாக பெற்று Vibe என்ற கூடுதல் ஆக்செரீஸ் பேக் பெற்ற வேரியண்டுகளும் உள்ளது.

ஷைன் வேரியண்டில் எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் விங் மிரர், ரியர் பார்க்கிங் கேமரா, மேனுவல் பகல்/இரவு பின்புற பார்வை கண்ணாடி மற்றும் முன்புற பனி விளக்குகள் போன்றவை உள்ளது. கூடுதலாக இந்த வேரியண்டில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் உள்ளது. C3 காரில் இப்போது My Citroen Connect ஆப் பெற்று சுமார் 35 கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

2023 C3 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் TPMS, ESP மற்றும் ஹில் அசிஸ்ட் போன்றவையும் உள்ளது.

சிட்ரோன் சி3 காருக்கு போட்டியாக டாடா பன்ச், மாருதி சுசூகி இக்னிஸ், ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்றவை உள்ளன.

Exit mobile version