2023 ஹூண்டாய் ஐ20 காரின் டீசர் வெளியானது

hyundai i20 teaser

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தனது சமூக ஊடக பக்கங்களில் ஐ20 காரின் வருகை உறுதி செய்து டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேம்பட்ட ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மாடலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது.

2023 Hyundai i20 facelift

புதிய ஐ20 காரில் குறிப்பாக டிசைன் மாற்றங்களில், எல்இடி ஹெட்லைட் அம்சத்துடன் அகலமான பம்பர் மாற்றியமைக்கப்பட்ட கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏர்டேம் கொண்டதாக அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பானெட் கொடுக்கப்பட்டு 17 அங்குல அலாய் வீல் புதிய டிசைன் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் i20 காரின் இன்டிரியர் வசதிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், உதவி மற்றும் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் உதவியைத் தொடர்ந்து லேன் உடன் வரும் ADAS அம்சம் கொண்டுள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் முன்பை விட சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு ADAS நுட்பம் பெற வாய்ப்பில்லை.

ஹூண்டாய் i20 காருக்கான தற்போதைய என்ஜின் வரிசையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய i20 மாடலில் 1.2 லிட்டர் அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உள்ளது.

Exit mobile version