கார் செய்திகள்

2023 ஹூண்டாய் வெர்னா காரின் படம் வெளியானது

வரும் மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வெளிப்புற தோற்ற படங்களை அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எலன்ட்ரா காரின் தோற்ற உந்துதலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெர்னா காருக்கான முன்பதிவு தற்போது ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஹூண்டாய் புதிய வெர்னா பிராண்டின் உணர்ச்சிகரமான ஸ்போர்ட்டிவ் வடிவமைப்பினை பெறுகிறது, டூஸான் எஸ்யூவி புதிய மாடல்களிலும் வெளிநாட்டில் விற்கப்படுகின்ற சமீபத்திய தலைமுறை எலன்ட்ரா மற்றும் ஹூண்டாய் கிராண்டியர் செடானிலும் காணப்படுகிறது.

2023 Hyundai Verna

வெர்னா காரின் வெளிப்புற தோற்ற அமைப்பில் தனித்துவமான ஸ்டைலிங் அம்சத்தை தனது முந்தைய மாடல்களில் இருந்து வேறுபடுத்துகின்றன. இதில் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் செட்-அப் முன்புறம் மற்றும் விளிம்பில் இருந்து விளிம்பு வரை நீட்டிக்கப்படும் முழு எல்இடி லைட் பார் ஆகியவற்றைப் பெறுகிறது.

பிரீமியம் தோற்றம் கொண்ட டயமண்ட் கட் அலாய் வீல் வடிவமைப்பு. பக்கவாட்டில் புதிய எலன்ட்ராவின் வடிவத்தை சார்ந்த ஸ்டைலிங் மற்றும் மடிப்புகள் உள்ளன. சி-பில்லர் ஒரு தனித்துவமான பளபளப்பான ஸ்டைலிங் பெறுகிறது.

இரண்டு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களை மட்டும் பெறும் வெர்னா காரில் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ-பெட்ரோல் சுமார் 160hp பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடியுடன் இணைக்கப்படும்.

அடுத்து, 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஹூண்டாய் வெர்னா காருக்கு ஆரம்ப நிலை எஞ்சினாக இருக்கும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது IVT, CVT ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கலாம்.

வெர்னா காருக்கு போட்டியாக ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்கள் உள்ளன.

Share