Automobile Tamilan

மெர்சிடிஸ்-பென்ஸ் A-Class மற்றும் AMG A45 S 4Matic+ விற்பனைக்கு வந்தது

Mercedes Benz A Class Limousine & AMG A 45 S facelifts launched

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய A-class 200 லிமினோஸ் கார் விற்பனைக்கு ₹ 45.80 லட்சத்திலும் மற்றும் ஏஎம்ஜி A45 S 4Matic+ பெர்ஃபாமென்ஸ் கார் விலை ₹ 92.50 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் A 200 Limousine மற்றும் AMG A 45 என இரண்டினை மட்டுமே புதுப்பித்துள்ளது,  டீசலில் இயங்கும் A200d மாடலை 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

2023 Mercedes-Benz A-Class & AMG A45 S 4Matic+

விற்பனைக்கு வந்துள்ள புதிய A-Class 200 லிமோசைன் சொகுசு காரில் 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 161 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகிறது.  இந்த மாடலில் ஏழு வேக இரட்டை கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் உடன் (DCT) இணைக்கப்பட்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்ட 3.9 வினாடிகளிலும் அதிகபட்ச வேகம் 270Km/hr ஆக உள்ளது.

அடுத்து, AMG A 45 4Matic+பெர்ஃபாமென்ஸ் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் 415 bhp மற்றும் 500 Nm டார்க் வழங்கி AMG ஸ்பீடுஷிஃப்ட் DCT 8G டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது.  3.9 வினாடிகளில் 0-100 வேகத்தை எட்டும் மாடலில் ஏஎம்ஜி டார்க் கட்டுப்பாட்டுடன் செயல்திறன் மிக்க 4MATIC+ ஆல்-வீல் டிரைவையும் கொண்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்ட 8.3 வினாடிகளிலும் அதிகபட்ச வேகம் 230Km/hr ஆக உள்ளது.

2023 மெர்சிடிஸ்-பென்ஸ் 2023 ஏ-கிளாஸ் லிமோசைன் காரில் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், மற்றும் 17-இன்ச் 5 ட்வின் ஸ்போக் அலாய் வீல் மற்றும் புதிய எல்இடி டெயில்லைட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

காரின் உள்ளே, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருக்கு  10.25-இன்ச் திரைகளுடன் சிக்னேச்சர் டிஸ்ப்ளேவில் தொடுதிரை கட்டுப்பாடுகளுடன் வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீலும், மெர்சிடிஸ் இப்போது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்குகிறது.

ஏஎம்ஜி மாடல் இது போன்ற மேம்பாடினை ஸ்டைலிங் மேம்பாடுகளை கொண்டதாக பெற்றுள்ளது. இரு கார்களிலும் சமீபத்திய MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு விதமான மாறுபட்ட வசதிகளை வழங்குகின்றது.

இந்திய சந்தையில் ஏ-கிளாஸ் லிமோசின் காருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே உள்ளது.

Exit mobile version