Automobile Tamilan

கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திரங்களை பெற்ற டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி

crash test for tata safari and harrier

குளோபல் என்சிஏபி மையத்தால் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்டுள்ள 2023 டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி என இரண்டு மாடல்களும் 5 நட்சத்திரங்களை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் வயது வந்தோருக்கான பாதுகாப்பு என இரண்டிலும் பெற்றுள்ளது.

குளோபல் NCAP கிராஷ் சோதனைகளின் முடிவில் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டும் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும், வயதுவந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 பெற்று மிக உறுதியான கட்டுமானத்தை கொண்ட காராக விளங்குகின்றது.

Tata Safari, Harrier

புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு மாடல்களும் #SafercarsforIndia திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்ட முடிவுகள் வெளியாகி மிக உறுதியான டாடா நிறுவன கட்டுமானத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வயதுவந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 பெற்றுள்ள இரண்டு கார்களும் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து பாதுகாப்பிற்கு நன்றாக உள்ளது, அதே நேரத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் மார்புக்கு பாதுகாப்பு போதுமானதாகவும் உள்ளது.

பக்கவாட்டு போல் கிராஷ் டெஸ்ட் முறையில், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்புக்கு “நல்ல பாதுகாப்பை” கொண்டிருக்கின்றது. இந்த காரில் உள்ள பக்கவாட்டு ஏர்பேக் மோதலின் போது தலை மற்றும் இடுப்புக்கு நல்ல பாதுகாப்பையும், மார்புக்கு ஓரளவு பாதுகாப்பையும், வயிற்றுப் பகுதிக்கு போதுமான பாதுகாப்பையும் கொடுக்கின்றது.

மிக குறிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம், கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு பிறகும் பாடிஷெல் மிக உறுதியாக கூடுதல் சுமையை தாங்கும் திறன் பெற்றதாக அமைந்துள்ளது.

Child occupant

குளோபல் NCAP இரு கார்களிலும் 18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தைக்கு ஏற்ப டம்மிகளை பொருத்தி இருவரும் பின்நோக்கி அமர்ந்திருக்கும் நிலையில் சோதனை செய்கையில்  49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை பெற்று 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

 

Exit mobile version