Automobile Tamilan

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

marazzo

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி வெளியிட்டுள்ளதால் ரூ.14,59,400 முதல் ரூ.17,00,200 வரை அமைந்துள்ளது.

மராஸ்ஸோ காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், பிரசத்தி பெற்ற மாருதி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியன் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவை கிடைத்து வருகின்றது.

Mahindra Marazzo

மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123hp மற்றும் 300Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 2 எர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, ரியர் பார்க்கிங் சென்சாரை கொண்டிருக்கிறது.

7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட், டேடைம் ரன்னிங் லைட், 17 அங்குல அலாய் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது.

2024 Mahindra Marazzo price list

(ex-showroom)

Exit mobile version