Automobile Tamilan

2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் என்ஜின் விபரம் வெளியானது

new maruti swift car

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வரவுள்ள புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரக காரின் Z12E ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் விபரம் வெளியாகியுள்ளது. புதிய என்ஜின் அதிகபட்சமாக 40Kmpl வரை மைலேஜ் தரக்கூடும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட் உள்ள காரில் இடம்பெற்றிருக்கின்ற 4 சிலிண்டர் K12B பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக புதிய மூன்று சிலிண்டர் Z12E என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

2024 Maruti Suzuki Swift Engine

சுசூகி ஸ்விஃப்ட் மாடலில் புதிதாக இடம்பெறுகின்ற மிக வலுவான ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய மூன்று சிலிண்டர்  Z12E பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அனேகமாக தற்பொழுது உள்ள மாடலை போலவே 89 hp பவரை வெளிப்படுத்தக்கூடும். கியர்பாக்ஸ் தேர்வுகளில் சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி பெற உள்ளது.

இந்திய சந்தைக்கு அனேகமாக 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்படுமா அல்லது சிவிடி வழங்கப்படுமா என உறுதியான தகவல் இல்லை.

ஜப்பான் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் மாருதி ஸ்விஃப்ட் படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச மாடலில் ADAS பாதுகாப்பு தொகுப்பு பெற உள்ள நிலையில், இந்திய சந்தைக்கு இந்த அம்சம் இடம்பெறாது.

இன்டிரியரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 அங்குல தொடுதிரை அமைப்பு, அனலாக் முறையிலான டயல் பெற்ற MID டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்ற அம்சங்களில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை அடங்கும்.

2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.6 லட்சத்துக்குள் துவங்கலாம்.

Suzuki Swift Image Gallery

Exit mobile version