Car News

2024 நிசான் மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta, N-Connecta, Tekna மற்றும் Tekna+ என மொத்தமாக 6 வேரியண்டின் அடிப்படையில் 18 வேரியண்டுகளுடன் இரண்டு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ளது.

1.0 லிட்டர் B4D பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷனை கொண்டுள்ள மேக்னைட் காரில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை கொண்டுள்ளது.

Magnite Visia

ஆரம்ப நிலை விசியா வேரியண்டில் 1.0 லிட்டர் B4D எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி பெற்று

  • ஒற்றை கருப்பு நிற இன்டீரியர்
  • 16 அங்குல எஃகு சக்கரங்கள்
  • டயர் பிரெஷர் மானிட்டர் சிஸ்டம்
  • நான்கு ஜன்னல்களுக்கும் பவர் பட்டன்
  • எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சரிசெய்தல்
  • பின்புற ஆர்ம்ரெஸ்ட்
  • 60:40 ஸ்பிளிட் பின் இருக்கை

Magnite Visia+

விசியா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 லிட்டர் B4D எஞ்சினுடன் மேனுவல் மட்டும் பெற்று

  • 9.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • கனெக்ட்டிவிட்டி அம்சங்கள்
  • 4 ஸ்பீக்கர்கள்
  • ரிவர்ஸ் கேமரா
  • ரியர் வைப்பருடன், வாஷர்
  • ரியர் டிஃபோகர்

Magnite Acenta

விசியா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 லிட்டர் B4D எஞ்சின் மேனுவல், ஏஎம்டி மட்டும் பெற்று 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் சிவிடி ஆப்ஷனில்

  • ஸ்கிட் பிளேட்
  • தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
  • மின்சாரம் மடிக்கக்கூடிய, சரிசெய்யக்கூடிய ORVM
  • சென்டரல் டோர் லாக்கிங்
  • டூயல் டோன் வீல் கவர்
  • டூயல் ஹார்ன்
  • வேகத்தை அறிந்து லாக் செய்யும் வசதி
  • ORVMகளில் LED டர்ன் இண்டிகேட்டர்
  • திருட்டை தடுக்கும் அலாரம்
  • ஸ்மார்ட் கீ (டர்போ)
  • ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் (டர்போ)
  • புஷ் பட்டன் ஸ்டாப்/ஸ்டார்ட் (டர்போ)
  • ஆன்டி-ரோல் பார் (டர்போ)
  • வால்க் அவே அன்லாக் (டர்போ)

Magnite N-Connecta

அசென்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 லிட்டர் B4D எஞ்சின் மேனுவல், ஏஎம்டி மட்டும் பெற்று 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மேனுவல், சிவிடி ஆப்ஷனில்

  • 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்
  • 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே
  • 6 ஸ்பீக்கர்கள்
  • ARKAMYS மூலம் 3D ஒலி
  • லெதேரேட் டாஷ்போர்டு
  • தானியங்கு மங்கலான IRVM
  • ஸ்மார்ட் கீ
  • முன் மற்றும் பின்புற USB வகை C சார்ஜர்கள்
  • சேமிப்பகத்துடன் கூடிய முன் மைய ஆர்ம்ரெஸ்ட்
  • L வடிவ டிஆர்எல்கள்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே
  • ஃபுளோட்டிங் 8 அங்குல தொடுதிரை
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே
  • வாய்ஸ் கண்ட்ரோல்
  • ரியர் பார்சல் டிரே

Magnite Tekna

N-கனெக்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 லிட்டர் B4D எஞ்சின் மேனுவல், ஏஎம்டி மட்டும் பெற்று 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மேனுவல், சிவிடி ஆப்ஷனில்

  • பை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்
  • ஹெட்லேம்ப்களில் LED டர்ன் இன்டிகேட்டர்கள்
  • 360 டிகிரி கேமரா
  • LED டெயில் லைட்
  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • ஆரஞ்சு தையல் கொண்ட கருப்பு மற்றும் வெளிர் சாம்பல் உட்புறம்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்
  • குளிரூட்டப்பட்ட குளோவ் பாக்ஸ்
  • LED மூடுபனி விளக்குகள்
  • குரோம் பெல்ட்லைன்
  • இருக்கைகளில் லெதரெட்
  • லெதரெட் சுற்றப்பட்ட ஹேண்ட்பிரேக்

Magnite Tekna+

மேக்னைட் டெக்னா+ வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 லிட்டர் B4D எஞ்சின் மேனுவல், ஏஎம்டி மட்டும் பெற்று 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மேனுவல், சிவிடி ஆப்ஷனில்

  • பிரீமியம் 2 டோன் பிரவுன்/ஆரஞ்சு
  • பிரவுனிஷ் ஆரஞ்சு மூடப்பட்ட டாஷ்போர்டு
  • பிரவுனிஷ் ஆரஞ்சு கதவு இன்ஷர்ட்
  • பிரீமியம் மோட்யூர் லெதர்^
  • வெப்பத்தை தடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர் இருக்கைகள்
  • சேமிப்பு மற்றும் பழுப்பு நிற ஆரஞ்சு தோல் கொண்ட முன் ஆர்ம்ரெஸ்ட்
  • நினைவக செயல்பாட்டுடன் ஆம்பியன்ட் லைட்டிங்

புதிய மேக்னைட் விலை பட்டியல்

ரூ.5.99 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரை விலை அமைந்துள்ள நிலையில் முழுமையான மேக்னைட் விலை பட்டியல் படத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

Share
Published by
MR.Durai