Automobile Tamilan

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

2025 hyundai i20 knight edition

ஹூண்டாய் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட i20 மற்றும் i20 N-line நைட் எடிசனில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக Asta (O) வேரியண்டில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

நைட் எடிசன் வசதிகள்

கருப்பு அலாய் வீல், சிவப்பு பிரேக் காலிப்பர், கருப்பு நிற முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டு, கருப்பு ORVMS மற்றும் பக்கவாட்டில் சில் கார்னிஷ், மேட் கருப்பு  நிற ஹூண்டாய் லோகோ மற்றும் நைட் லோகோ உள்ளது. இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிராஸ் நிற இன்ஷர்ட்கள் உள்ளது, கூடுதலாக மேனுவல் கியர்பாக்ஸில் மெட்டல் பெடல்கள் உள்ளது.

இந்த ஹேட்ச்பேக்கில் 83hp பவர் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டு CVT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வருகிறது.

ரூ.9.15 லட்சத்திலும் Sportz (O) மேனுவல் வேரியண்டில் பெற்றுள்ள நைட் எடிசன் முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.11.35 லட்சத்தில் Asta (O) CVT வேரியண்டிலும் நைட் எடிசனும் உள்ளது.

i20 Asta மற்றும் Asta (O) டிரிம்களில் பின்புற ஸ்பாய்லரையும் சேர்த்துள்ளது, அதே நேரத்தில் Asta (O) CVT வேரியண்டில் கூடுதலாக டேஷ்கேம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே பெற்றுள்ளது.

i20 N-line நைட் எடிசன்

பெர்ஃபாமென்ஸ் ரக ஐ20 என்-லைனிலும் கருப்பு அலாய் வீல், சிவப்பு பிரேக் காலிப்பர், கருப்பு நிற முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டு, கருப்பு ORVMS மற்றும் பக்கவாட்டில் சில் கார்னிஷ், மேட் கருப்பு  நிற ஹூண்டாய் லோகோ மற்றும் நைட் லோகோ உள்ளது. இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிராஸ் நிற இன்ஷர்ட்கள் உள்ளது, கூடுதலாக மேனுவல் கியர்பாக்ஸில் மெட்டல் பெடல்கள் உள்ளது.

i20 N Line மாடல் 120hp பவர் வெளிப்படுத்தும் 1.0 டர்போ பெட்ரோல் எஞ்சின் பெற்று 7 வேக டிசிடி மற்றும் 6 வேக மேனுவல் உள்ளது.

N8 MT Knight Edition – ₹ 11.43 லட்சம்

N8 DCT Knight Edition – ₹ 12.53 லட்சம்

(EX-showroom Price)

Exit mobile version