Automobile Tamilan

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

Mahindra Scorpio N with ADAS

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஸ்கார்பியோ என் மாடலின் 2025 ஆண்டிற்கான மேம்பாடாக  ADAS பெற்ற Z8L மற்றும் புதிய Z8T வேரியண்ட் ஆனது ADAS சார்ந்த வசதிகள் மட்டுமில்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.25.62 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வெளியிடப்பட்டுள்ளது.

Z8L ADAS Variant Prices

Z8T Variant Prices

Z8T வேரியண்டில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்புற பார்க்கிங் சென்சார், ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர் வியூ மிரர் மற்றும் 360 டிகிரி கேமரா உடன் 18-இன்ச் அலாய் வீல், 12-ஸ்பீக்கர் சோனி ஆடியோ சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் 6 பவர்டு டிரைவர் இருக்கை போன்ற அம்சங்கள் உள்ளன.

Z8T வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 46,000 விலை அதிகமாக உள்ள Z8L லெவல்-2 ADAS சார்ந்த வசதிகள் மூலம் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, தானியங்கி அவசரகால, பிரேக்கிங், அடாப்ட்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு, லேன் புறப்பாடு எச்சரிக்கை, லேன் பாதுகாப்பு உதவி, போக்குவரத்து அடையாள அங்கீகாரங்களை அறிந்து செல்லும் வசதி, ஹைபீம் அசிஸ்ட், ஸ்பீடு அலர்டு மற்றும் முன்புறத்தில் உள்ள வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.

Exit mobile version