Automobile Tamilan

2025 கிகர் எஸ்யூவியை ஆகஸ்ட் 24ல் வெளியிடும் ரெனால்ட்

kiger facelift teased

ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர் அடுத்த மேம்படுத்தப்பட்ட மாடலாக 2025 கிகர் எஸ்யூவி  மாடலை ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியிட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. குறிப்பாக, புதிய மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் எஞ்சின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஃபேஸ்லிஃப்ட், டஸ்ட்டர், போரியல் 7 இருக்கை எஸ்யூவி மற்றும் இவி மாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ட்ரைபர் சந்தைக்கு வந்துள்ளதால், அடுத்து கிகர் தேதி வெளியாகியுள்ளது.

எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல், 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இருக்கும்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட் பெயர்கள், நிறங்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி விளக்குகள், முன்புற பம்பர், கிரில் உள்ளிட்ட வெளிப்புற மாற்றங்களுடன், இன்டீரியரில் சிறிய அளவிலான நிற மாற்றங்களுடன், புதிய ரெனால்ட் லோகோ பெற்றிருக்கும்.

மற்றபடி, அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் பெற்று உறுதியான கட்டுமானத்தை கொண்டதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.6.30 லட்சத்துக்குள் அமையலாம்.

Exit mobile version