Automobile Tamilan

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

renault kiger

புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ரெனால்ட் கிகர் மாடலில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், புதிய நிறம் மற்றும் இன்டீரியிரில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை வண்ணங்களை பெற்று பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகளை கொண்டு விற்பனைக்கு ரூ.6,29,995 முதல் ரூ.11,26,995 வரை நிர்ணயம் (எக்ஸ்-ஷோரூம்) செய்யப்பட்டுள்ளது.

முந்தைய வேரியண்டுகளின் பெயரை மாற்றி ட்ரைபர் போல  Authentic, Evolution, Techno மற்றும் Emotion என எளிமைப்படுத்தப்பட்டு வெளிப்புறத்தில் புதிய பச்சை நிறத்தை பெற்று கவர்ந்திழுக்கின்றது. மற்றபடி, இன்டர்லாக்கு டைமண்ட் ரெனால்ட் லோகோ பெற்று பம்பர் முற்றிலும் மாற்றப்பட்டு, கிரில் அமைப்பு, ஹெட்லைட், பனி விளக்கு என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்தில் பம்பர் மாற்றம் மற்றும் டெயில் விளகுகள் சற்று மேம்பட்டுள்ளது.

இன்டீரியரில் தற்பொழுது கருப்பு மற்றும் லைட் கிரே கலவையை பெற்று 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுகாற்றோட்டமான முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ விளக்குகள் மற்றும் வைப்பர்கள், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை டாப் வேரியண்டில் உள்ளது.

பாதுகாப்பில் தற்பொழுது அடிப்படையாக 6 ஏர்பேக்குகளை கொண்டு ESP, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளது.

ரெனால்ட் கிகரில் தொடர்ந்து 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இருக்கும்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

Renault Kiger Price list

Variant Price (₹)
Authentic MT 6,29,995
Evolution MT 7,09,995
Evolution AMT 7,59,995
Techno MT 8,19,995
Techno MT Dual Tone 8,42,995
Techno AMT ENERGY 8,69,995
Techno AMT Dual Tone 8,92,995
Emotion MT 9,14,995
Emotion MT Dual Tone 9,37,995
Emotion Turbo MT 9,99,995
Emotion Turbo MT Dual Tone 9,99,995
Techno CVT Turbo 9,99,995
Techno CVT Turbo Dual Tone 9,99,995
Emotion CVT Turbo 11,29,995
Emotion CVT Turbo Dual Tone 11,29,995
Exit mobile version