Automobile Tamilan

2025 டாடா ஹாரியர் அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

tata harrier suv

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவிகளிலும் பல்வேறு மாறுதல்களுடன் வேரியண்ட் வாரியாக சில மாற்றங்களுடன் Adventure X என்ற வேரியண்டை கொண்டு வந்துள்ளது.

2025 டாடா ஹாரியர் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 14,99,990 முதல் ரூ.24,44,000 வரை அமைந்துள்ளது. சலுகை விலை அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 Tata Harrier

ஹாரியரில்  170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக மேனுவல் அல்லது ஆறு வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

புதிதாக வந்துள்ள Adventure X  வேரியண்டில் க்ரூஸ் கட்டுப்பாட்டுடன் கூடிய ADAS, 360-டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் உடன் கூடிய டிரெயில் ஹோல்ட் EPB, டிரெயில் ரெஸ்பான்ஸ் முறைகள் (இயல்பான, கரடுமுரடான, ஈரமான),  எர்கோமேக்ஸ் டிரைவர் இருக்கை, 10.24-இன்ச் இரட்டை டிஜிட்டல் திரைகள், டிரெயில் சென்ஸ் ஆட்டோ ஹெட்லேம்ப்கள்,  அட்வென்ச்சர் X லோகோவுடன் கூடிய 18-இன்ச் அலாய் வீல் மற்றும் ஓனிக்ஸ் டிரெயில் உட்புறத்தை பெற்றதாக அமைந்துள்ளது.

 Variants EX-showroom
Smart ரூ. 14,99,990
Pure X ரூ. 17,99,000
Adventure X ரூ. 18,99,000
Adventure X+ ரூ. 19,34,000
Fearless X ரூ. 22,34,000
Fearless X+ ரூ. 24,44,000

மேலே கொடுக்கப்பட்டுள்ள விலை பட்டியலில் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகள் ரூ.1.70 லட்சம் வரை கூடுதலாகவும், டார்க் பதிப்புகளின் விலை ரூ.65,000 முதல் ரூ.55,000 கூடுலாகவும், இறுதியாக ஸ்டெல்த் எடிசன் விலை ரூ.75,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

Exit mobile version