Automobile Tamilan

ரூ.11.34 லட்சத்தில் 2025 டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் வெளியானது

2025 Toyota Urban Cruiser Hyryder

டொயோட்டா நிறுவனத்தின் 2025 அர்பன் குரூஸர் ஹைரைடர் காரின் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகளுடன் மேம்படுத்த கட்டுமானத்துடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் பெற்ற ஆட்டோமேட்டிக் வேரியண்டுகள் என பல முக்கிய மாற்றங்களை பெற்றுள்ளது.

கூடுதலாக புதிய மாடலில் 15W USB-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் LED ரீடிங் விளக்குகள் அனைத்து வகையிலும், எட்டு வழி எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை, காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற கதவு சன்ஷேடுகள் மற்றும் ஆம்பியன்ட் விளக்குகள் உள்ளன

அர்பன் குரூஸர் ஹைரைடரில் தொடர்ந்து 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது. 12V ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரின் உதவியுடன் மைல்டு ஹைபிரிட் பெற்ற இந்த எஞ்சின் கொண்ட மாடல் 21.12kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

அடுத்து, 1.3 லிட்டர் மூன்று சிலிண்டர் ஹைபிரிட் எஞ்சின் அதிகபட்சமாக  92hp, 122Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக உள்ள பேட்டரி இணைந்து ஒட்டுமொத்தமாக  116hp, 141Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ-சிவிடி கியர்பாக்ஸ் பெற்று இந்த எஞ்சின் கொண்ட மாடல் 27.7kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பொருத்தப்பட்டு 88hp மற்றும் 121Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மட்டும் உள்ளது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.11.34 லட்சத்தில் துவங்குகின்றது.

Exit mobile version