Automobile Tamilan

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue n-line suv front

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை 2026 வென்யூ N-Line இந்திய காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று ஸ்போர்ட்டிவான அனுபவத்தை வழங்கும் நோக்கில் ரூ.10.55 லட்சம் முதல் ரூ.15.48 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  மேம்பட்ட பாதுகாப்பு, ஸ்டைலிஷ் டிசைன், ADAS Level 2 டெக் ஆகியவை போட்டியாளர்களிம் இருந்து தனித்துவமாக்குகின்றன.

ஹூண்டாய் Venue N-line விலை விவரம்

இந்த வெயூ என்-லைனில் N6, N10 என இரு வேரியண்டுகளின் அடிப்படையில் மாடல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Variant Prices
VENUE N Line 1.0 Turbo Petrol MT N6 ₹ 10 55 400
VENUE N Line 1.0 Turbo Petrol MT N6 DT ₹ 10 73 400
VENUE N Line 1.0 Turbo Petrol DCT N6 ₹ 11 45 400
VENUE N Line 1.0 Turbo Petrol DCT N6 DT ₹ 11 63 400
VENUE N Line 1.0 Turbo Petrol DCT N10 ₹ 15 30 100
VENUE N Line 1.0 Turbo Petrol DCT N10 DT ₹ 15 48 100

(எக்ஸ்-ஷோரூம்)

Venue N-line சிறப்பம்சங்கள் என்ன..!

வழக்கமான வென்யூ மாடலை விட வேறுபட்டதாக அமைந்துள்ள வெனியூ என்-லைனில் வெளிப்புறத்தில் சிவப்பு நிறம் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் சிவப்பு நிறத்துடன் கூடிய ஸ்போர்ட் ஸ்கிட் பிளேட் அமைக்கப்பட்டுள்ளது. N Line பேட்ஜிங், R17 டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் ரெட் நிற பிரேக் காலிபர்கள் இதன் ஸ்போர்ட் தோற்றத்தை வலுப்படுத்துகின்றன.

இன்டீரியர் அமைப்பில் முழுமையான கருமை நிற கேபினை பெற்று ஹூண்டாயின் லோகோவிற்கு பதிலாக என்-லைன் தரப்பட்டு கருப்பு மற்றும் சிவப்பு கலவையுடன் கூடிய இன்டீரியர், N-லோகோ கொண்ட ஸ்போர்டிவான இருக்கைகள், லெதரெட்டை மேற்புறம் மற்றும் N-Line ஸ்டீயரிங் வீல் ஆகியவை வாகனத்தின் ஸ்போர்ட்டிவ் உணர்வை கூட்டுகின்றன.

12.3-இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளஸ்ட்டர் திரைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, Over-the-Air (OTA) அப்டேட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஹூண்டாயின் ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. SDV சார்ந்த மேம்பாடுகளை பெற்றதாக அமைந்துள்ள முதல் காம்பேக்ட் எஸ்யூவி ஆகும்.

வென்யூ என்-லைன் நிறங்கள்

கவர்ச்சிகரமான ஹேசல் நீலம், டிராகன் சிவப்பு, டைட்டன் சாம்பல், அட்லஸ் வெள்ளை, அபிஸ் கருப்பு ஆகிய ஒற்றை வண்ணங்களுன் அபிஸ் கருப்பு கூரையுடன் ஹேசல் நீலம், அபிஸ் கருப்பு கூரையுடன் டிராகன் சிவப்பு, அபிஸ் கருப்பு கூரையுடன் அட்லஸ் வெள்ளை என மொத்தமாக 8 நிறங்கள் கிடைக்கின்றது.

பாதுகாப்பு சார்ந்த வென்யூ N-line சிறப்புகள்

அடிப்படையான பாதுகாப்பில் N Lineல் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில்-அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் உள்ள நிலையில் மேம்பட்ட பாதுகாப்பில் Level 2 ADAS தொழில்நுட்பத்துடன் வருகிறது, இதில் முன்னோக்கி மோதல் தவிர்ப்பு, லேன் கீப் அசிஸ்ட், ஓட்டுநர் கவனம் திசை திரும்பினால் எச்சரிக்கை, தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு மற்றும் 360-டிகிரி கேமரா மானிட்டர் போன்ற 21-க்கும் மேற்பட்ட உதவி போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வழக்கமான மாடலை விட மிகவும் வேறுபட்ட சஸ்பென்ஷனை பெற்றுள்ள வென்யூ என்-லைன் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

என்ஜின் விபரம்

இந்த புதிய Venue N Line எஸ்யூவி மாடலில் ஒற்றை 1.0 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு 120 PS பவர் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் முறையே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (Dual Clutch Transmission) இரண்டும் வழங்கப்படும் நிலையில் ஸ்போர்ட்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் ஆகியவை கொண்டுள்ளது.

டர்போ பெட்ரோல் மைலேஜ் மேனுவல் லிட்டருக்கு 18.74 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் 20 கிமீ வரை லிட்டருக்கு வெளிப்படுத்தும்.

வென்யூ போட்டியாளர்கள் யார் ?

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சந்தையின் போட்டியாளர்களான டாடா நெக்ஸான், பிரெஸ்ஸா, சோனெட், XUV 3XO, கைலாக், மேக்னைட், கிகர் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version