
நமது நாட்டில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற டாடா பஞ்ச் , தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்ட் பல்வேறு முக்கிய மாற்றங்கள், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகியுள்ளது. ரூ. 5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் துவங்கி டாப் வேரியண்ட் ரூ. 9.79 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் தோற்றத்தைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டு முன்பக்கத்தில் மெல்லிய கிரில், செங்குத்தான ஹெட்லேம்ப் தொகுப்பு மற்றும் புதிய பம்பர் ஆகியவை இதற்கு ஒரு நவீன தோற்றத்தைக் கொடுக்கின்றன. எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் பின்பக்கத்தில் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் ஆகியவற்றை பெற்று, 16-அங்குல புதிய அலாய் வீல்கள் காரின் பக்கவாட்டுத் தோற்றத்தை மேம்படுத்தியுள்ளன.
உட்புறத்தில் மிகப்பெரிய மாற்றமாக, டாடாவின் நெக்ஸான் காரில் உள்ளதைப் போன்ற 10.25 அங்குல தொடுதிரை மற்றும் 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஸ்போக் கொண்ட புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் ஒளிரும் வகையிலான டாடா லோகோ ஆகியவை உட்புறத்தை மிகவும் பிரீமியமாக மாற்றியுள்ளன.
360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர் (Blind View Monitor), காற்றோட்ட வசதி கொண்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், அனைத்து வேரியண்ட்களிலும் 6 காற்றுப்பைகள் நிலையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்களுடன், தற்போது புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் (Turbo Petrol) இன்ஜினும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 120 PS மற்றும் 170 Nm வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடலில் ஏஎம்டி கியர் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மைக்ரோ எஸ்யுவி கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள இந்தப் புதிய டாடா பஞ்ச், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.
Tata Punch Price list
| Variant | 1.2-litre naturally aspirated petrol | 1.2-litre naturally aspirated petrol+ CNG | 1.2-litre turbo-petrol | ||
| MT | AMT | MT | AMT | MT | |
| Smart | Rs 5.59 lakh | – | Rs 6.69 lakh | – | – |
| Pure | Rs 6.49 lakh | – | Rs 7.49 lakh | – | – |
| Pure+ | Rs 6.99 lakh* | Rs 7.54 lakh* | Rs 7.99 lakh* | Rs 8.54 lakh | – |
| Adventure | Rs 7.59 lakh* | Rs 8.14 lakh | Rs 8.59 lakh* | Rs 9.14 lakh* | Rs 8.29 lakh |
| Accomplished | Rs 8.29 lakh | Rs 8.84 lakh | Rs 9.29 lakh | – | – |
| Accomplished+S | Rs 8.99 lakh | Rs 9.54 lakh | – | Rs 10.54 lakh | Rs 9.79 lakh |
All prices ex-showroom
*Sunroof available as optional extra for Rs 35,000(ex-showroom)