Automobile Tamilan

25வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஸ்கோடா இந்தியா

skoda india 25years

ஸ்கோடா ஆட்டோவின் 130 ஆண்டுகால கொண்டாட்டம் மற்றும் இந்தியாவில் 25 ஆண்டுகள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசனை கைலாக், குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களில் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாடல்களிலும் தலா 500 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், 360-டிகிரி கேமரா, படெல் லேம்ப், அண்டர் பாடி லைட்டிங் மற்றும் பாடி கார்னிஷ்கள் போன்றவை பெற்றுள்ளது.

Škoda Anniversary Edition Prices (Ex-showroom)

Model 1.0 TSI MT 1.0 TSI AT 1.5 TSI DSG
Kushaq Anniversary Edition ரூ.16,39,000 ரூ.17,49,000 ரூ.19,09,000
Slavia Anniversary Edition 15,63,000 ரூ.16,73,000 ரூ.18,33,000
Kylaq Anniversary Edition (Signature+ & Prestige) ரூ. 11,25,000 – ரூ.12,89,000

குஷாக் மான்டே கார்லோ லிமிடெட் எடிசனில் டீப் பிளாக் மற்றும் டொர்னாடோ ரெட் என இரு நிறங்களை பெற்றுள்ளது. டீப் பிளாக் விருப்பத்தில் டொர்னாடோ ரெட் நிறத்தில் பாகங்களும், அதே நேரத்தில் டொர்னாடோ ரெட் பதிப்புகளில் டீப் பிளாக் பாகங்களும் உள்ளன.

மற்ற அலங்காரங்களில் ஒரு மூடுபனி விளக்கு அலங்காரம், டிரங்க் அலங்காரம் மற்றும் கீழ் கதவு கார்னிஷ் இந்த மாடலுக்கான இலவச பாகங்கள் கிட்டில் 360 டிகிரி கேமரா அமைப்பு, புட்டில் விளக்குகள், அண்டர்பாடி லைட், ஒரு ஃபின் ஸ்பாய்லர் மற்றும் பி-பில்லரில் 25வது ஆண்டுவிழா பேட்ஜிங் ஆகியவை உள்ளது.

ஸ்லாவியா மான்டே கார்லோ அடிப்படையில் வந்துள்ள 25வது வருட பதிப்பில் டீப் பிளாக் மற்றும் டொர்னாடோ ரெட் என இரு நிறங்களை பெற்று சிறப்பு ஸ்டைலிங் கூடுதல் ஃப்ளையருடன் முன் பம்பர் ஸ்பாய்லர், மாறுபட்ட நிறத்தில் டிரங்க் மற்றும் கீழ் கதவு கார்னிஷ் உள்ளன.

இறுதியாக, புதிய கைலாக் எஸ்யூவி மாடலின் சிக்னேச்சர்+ (MT) மற்றும் பிரெஸ்டீஜ் (MT) என இரண்டு வேரியண்டிலும் 7 நிறங்களிலும் 360-டிகிரி கேமரா, படெல் லேம்ப், அண்டர் பாடி லைட்டிங் மற்றும் பாடி கார்னிஷ்கள் போன்றவை பெற்றுள்ளது.

Exit mobile version