Automobile Tamilan

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

mahindra xev 9s electric teased

மஹிந்திரா நிறுவனத்தின் BE 6, XEV 9e வெற்றியை தொடர்ந்து INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய 7 இருக்கை எஸ்யூவி மாடலுக்கு XEV 9S என்ற பெயரை அறிவித்து நவம்பர் 27, 2025ல் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தற்பொழுது வரை பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்களுடன் ரேஞ்ச் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் அனேகமாக முந்தைய மாடல்களில் 59kwh மற்றும் 79kwh பேட்டரி பேக்குகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த மாடலின் தோற்ற அமைப்பு தற்பொழுது சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற XUV 700 மாடலுக்கு இனையான எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாடல் கான்செப்ட் நிலையில் XUV e8 தழுவியதாக இருக்கலாம். இன்டீரியர் தொடர்பான அமைப்பில் சமீபத்திய XEV 9e காரிலிருந்து பெறப்பட்ட மூன்று தொடுதிரை செட்டப் கொண்டதாக அமைந்திருக்கலாம்.

விற்பனைக்கு அனேகமாக ரூ.20 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற XEV 9S ஆனது நிகழ் நேரத்தில் 500 கிமீ அதற்கும் கூடுதலான ரேஞ்ச் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version