மஹிந்திராவின் தார் எஸ்யூவி அறிமுக தேதி மற்றும் புக்கிங் விபரம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆஃப் ரோடர் எஸ்யூவி மாடலான தார் எஸ்யூவி காரின் இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விற்பனை அக்டோபர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை பிரத்தியேகமாக மஹிந்திரா தீர்மானம் செய்ய இரண்டு காரணங்கள் அமைந்துள்ளது.

அக்டோபர் 2, 1945 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் துவங்கப்பட்ட தினம், இதே நாளில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமும் என்பதும் நம் நினைவில் உள்ளது. அன்றைய தினமே விலை மற்றும் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளது.

தாரில் இடம்பெற உள்ள என்ஜின் விபரம்

தார் எஸ்யூவி மாடலில் முதன்முறையாக பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

AX மற்றும் LX என இரண்டு விதமான வேரியண்டுகளில் வரவுள்ள இந்த காரில் மேற்கூறை கன்வெர்டிபிள் அல்லது ஹார்ட் டாப் என இரு விதமான ஆப்ஷனுடன் வழங்கப்பட்டு 6 மற்றும் 4 இருக்கைகளுக்கான தேர்வினை கொண்டுள்ளது. இன்டிரியரில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள், ரூஃபில் ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் கேமரா, மல்டி இன்ஃபோ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெற்றுள்ளது.

புதிய தார் கார் 650 மிமீ தண்ணீர் நிறைந்துள்ள இடத்தில் மிக சிறப்பாக பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது, இது 226 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளதால் அனைத்து ஆஃப் ரோடு பயணங்குள்ளும் ஏற்றதாகவும், 16 அங்குல அல்லது 18 அங்குல சக்கரங்களுடன் வரவுள்ளது. தார் எஸ்யூவி 42 டிகிரி அணுகுமுறை கோணம், 27 டிகிரி வளைவு கோணம் மற்றும் 37 டிகிரி புறப்படும் கோணத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

தார் எஸ்யூவியின் விலை எதிர்பார்ப்புகள்

மஹிந்திராவின் தார் எஸ்யூவி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையலாம்.

Exit mobile version