புதிய மாருதி ஆல்டோ கார் விற்பனைக்கு வருகின்றது

இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் புதிய மாருதி ஆல்டோ காரினை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பாரத் கிராஷ் டெஸ்ட், பிஎஸ்-6 நடைமுறைகளுக்கு ஏற்ற மாடலாக ஆல்டோ இடம்பெற உள்ளது.

மாருதி ஆல்டோ கார்

மாருதி 800 காரின் மாற்று மாடலாக 2000ஆம் ஆண்டில் வெளியான மாருதி ஆல்டோ கார் பல்வேறு மாற்றாங்களுடன் தொடர்ந்து 19 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 14 ஆண்டுகளாக முதன்மையான காராக விளங்கி வந்த மாருதி ஆல்டோ மாடல், கடந்த 2018 ஆம் ஆண்டில் முதலிடத்தை இழந்தது.

மாறிவரும் சந்தையின் சூழலுக்கு ஏற்ப மிகவும் சவாலான மாடலாக எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஆல்டோ காரின் ஸ்டைல் மினி எஸ்யூவி போன்ற தோற்ற அமைப்புடன், பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய மாருதி ஆல்டோ கார் விற்பனையில் உள்ள ஆல்டோவை விட மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டு , எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் என மாருதியின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி ஆயூக்குவா தெரிவித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் விரும்பும் அம்சங்களுடன், கார் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், டுயல் ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள கிராஷ் டெஸ்ட் விதிமுறையான, பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் வெற்றிப் பெறக்கூடிய மாடலாக புதிய ஆல்டோ வெளியிட வாய்ப்புள்ளது.

தற்போது ஆல்ட்டோ 800சிசி மற்றும் ஆல்டோ கே10 கார்களில் இடம்பெற்றுள்ள 800சிசி , 1.0 லிட்டர் என்ஜின் மாடல்கள் பிஎஸ் 6 தரத்துக்கு இணையாக வெளியிடப்பட உள்ளது.

தற்சமயம் விற்பனையில் உள்ள மாருதி ஆல்டோ கார் ரூ.2.57 லட்சத்தில் கிடைக்கின்ற நிலையில் இந்த மாலை விட ரூ. 20,000 -ரூ.50,000 வரை விலை உயர்த்தப்பட்ட மாடலாக புதிய மாருதி ஆல்டோ விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஆல்டோ விற்பனையில் உள்ள க்விட், சான்ட்ரோ மற்றும் டியாகோ மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.