Automobile Tamilan

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

2ce57 tata safari suv production begins

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள ஹாரியர் எஸ்யூவி அடிப்பையிலான கிராவிட்டாஸ் கான்ற்செப்ட்டை தழுவியதாக சஃபாரி அமைந்துள்ளது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி  பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும். 2 வீல் டிரைவ் முதற்கட்டமாகவும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் சற்று தாமதமாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

லேண்ட் ரோவரின் OMEGARC பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட ஹாரியர் எஸ்யூவியின், அதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சஃபாரியில் இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவ தாத்பரியத்தை கொண்டிருக்கின்றது.

மிக நேர்த்தியான முன்புற அமைப்பில் க்ரோம் பூச்சு பெற்ற கிரில் உட்பட மிக நேர்த்தியான பம்பர் இணைக்கபட்டு, புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்துள்ளன.

இன்டிரியரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு பெற்று 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version