Automobile Tamilan

இந்தியாவில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் அறிமுகமாகிறது

ஆட்டோரிக்‌ஷா-விற்கு மாற்றாக களமிறங்க உள்ள, பஜாஜ் ஆட்டோவின் ‘பஜாஜ் க்யூட்’ என்ற பெயரில் ரூ.1.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

பஜாஜ் க்யூட்

கடந்த ஆறு ஆண்டுகால சட்டப் போரடாட்டங்களுக்குப் பிறகு உச்சநீதி மன்ற தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்ட குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தை , இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ள முதல் நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ விளங்க உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு உற்பத்தி நிலை மாடலாக பஜாஜ் ஆர்இ60 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியானது. ஆனால் இந்திய சந்தையில் பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் அனுமதிக்க இயலாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக பஜாஜ் க்யூட் விற்பனையை இந்தியா தவிர 30 க்கு மேற்பட்ட நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா உட்பட பஜாஜ் விற்பனை செய்து வருகின்றது.

ஐரோப்பாவின் குவாட்ரிசைக்கிள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆர்இ60 பிறகு பஜாஜ் க்யூட் என பெயரிடப்பட்டது. குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு பயணிகள் மற்றும் நான் டிரான்ஸ்போர்ட் வாகனமாக அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மூன்று சக்கர ஆட்டோக்களுக்கு மாற்றாக இந்த வாகனங்கள் விளங்கும்.

பஜாஜ் க்யூட் என்ஜின்

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 ஸ்பார்க் பிளக்குகளை  பெற்ற 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பஜாஜ் க்யூட் மினி காரின் மைலேஜ் லிட்டருக்கு 36 கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.

க்யூட் அறிமுக விபரம்

பெரும்பாலான மாநில போக்குவரத்து துறை அனுமதி வழங்க தொடங்கியுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் முழுமையான அனுமதியை க்யூட் குவாட்ரிசைக்கிள் நாடு முழுவதும் பெற உள்ளது.

ரூ.1.80 லட்சம் விலையில் பஜாஜ் க்யூட் மாரச் மாத தொடக்க வாரத்தில் விற்பனைக்கு வெளியாகும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக எலக்ட்ரிக் வகையில் இயங்கும் க்யூட் மினி கார் அடுத்த சில வருடங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version