Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

Bharat NCAP என்றால் என்ன ? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

by MR.Durai
30 June 2023, 5:05 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

Bharat NCAP ratings

புதிய கார் பாதுகாப்பு தர சோதனைகளுக்கான கிராஷ் டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் Bharat NCAP என்ற பெயரில் அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கூடுதல் செயலாளர் மகமூது அகமது கூறுகையில்,  ஜூலை 1, 2023 முதல் விதிமுறைகளை வெளியிடுவதற்கான செயல்முறையுடன் கூடிய வரைவு அறிவிப்பை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்று அகமது கூறினார்.

“நாங்கள் BNCAP விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துள்ளோம், இது வரைவு அறிவிப்பை இறுதி செய்துள்ளோம். இது ஜூலை 1 ஆம் தேதி கட்டாய மதிப்பாய்வுக்காக 30 நாட்களுக்கு வைக்கப்படும்,” என்று அகமது கூறினார்.

Bharat NCAP

பாரத் புதிய கார் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம்  ( Bharat NCAP – Bharat New Car Assessment Program) என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் இதன் முழுபெயர் பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் (Bharat New Vehicle Safety Assessment Programme – BNVSAP ) என அழைக்கப்பட உள்ளது.

சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையங்களுக்கு இணையான கிராஷ் விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய கார்களை சோதனை செய்வதற்கான மையத்தை ARAI நிறுவியுள்ளது. புதிய கார்களை 64 km/hr  வேகத்தில் சோதனை செய்யக்கூடும்.

அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கார்கள் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஏற்ற வடிவமைப்பு, காரின் கட்டமைப்பு பாதுகாப்பு, செயலில் மற்றும் செயலற்ற பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களை வழங்குதல் மற்றும் வாகனத்தில் வயது வந்தோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணிகள் உள்ளடக்கியதாக மதிப்பீட்டை தீர்மானிக்கப் பயன்படும்.

பாரத் என்சிஏபியின் சோதனை நெறிமுறை ஆனது உலகளாவிய கிராஷ் டெஸ்ட் மையங்களுக்கு இணையானதாக இருக்கும். மேலும் ,புதிய தரநிலைகள் என்சிஏபி இணையதளத்தில் 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரையிலான நட்சத்திர மதிப்பீடுகளை கொண்டிருக்கும்.

பாரத் என்சிஏபி மதிப்பீடுகள் தன்னார்வமாக இருக்கும் அதே வேளையில், சோதனைக்கான வாகன மாதிரிகளைப் பகிர்ந்து கொள்ள வாகன தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கப்படும் அல்லது ஷோரூம்களில் இருந்தும் வாகனங்களை எடுத்து சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

maruti suzuki wagonr crash

பயணிகள் கார்களுக்கு மட்டும் ஸ்டார் ரேட்டிங்

புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளின் படி, அதிகபட்சமாக எட்டு இருக்கைகள் வரை உள்ள பயணிகள் வாகனங்களுக்கும், 3.5 டன்னுக்கும் குறைவான மொத்த வாகன எடை கொண்டவையாகவும் உள்ள மாடல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு மதிப்பீடுகள் அமல்படுத்தப்படும்.

ஐசி என்ஜின் வாகனங்கள் மட்டுமல்லாமல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் செயல்படுத்த உள்ளது.

புதிய கொள்கை உள்ளூர் வாகன உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும், வகையில் தங்கள் மாதிரிகளை சோதனை மற்றும் நட்சத்திர தரவரிசைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை,

ஒருவேளை வாகன தயாரிப்பாளர்கள் அரசாங்கத்திடம் அக்டோபர் 1 முதல் கட்டாயம் என்ற நடைமுறையை தளர்த்த கோரிக்கை விடுத்தால் சற்று தாமதமாக பாரத் என்சிஏபி நடைமுறைக்கு வரக்கூடும்.

Related Motor News

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் அறிமுகமானது

இந்தியாவின் கிராஷ் டெஸ்ட் பாரத் என்சிஏபி அறிமுக தேதி வெளியானது

Tags: Bharat NCAP
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

அடுத்த செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan