ரூ.99.9 லட்சத்தில் பிஎம்டபிள்யூ X3 M விற்பனைக்கு வெளியானது

bccfe bmw x3 m

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக எம் பேட்ஜ் பெற்ற பிஎம்டபிள்யூ X3 M எஸ்யூவி காரினை இந்தியாவில் ரூ.99.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண எக்ஸ்3 மாடலை விட மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ X3 M காரின் முன்புற பாரம்பரியமான கிட்னி கிரில் அமைப்பு கருமை நிறத்தை கொண்டதாகவும், முன்புற பம்பரில் ஸ்டைலிங் மாற்றங்கள் அகலமான ஏர் டேக், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் 20 அங்குல அலாய் வீல், மிகவும் உயரமான வீல் ஆர்சு இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் X3 போலவே அமைந்திருந்தாலும் X3 M வேரியண்டிற்கு ஏற்ப ஸ்டைலிங் மாற்றங்கள் செய்யப்பட்டு, எம் மாடலுக்கு ஏற்ற கிளஸ்ட்டர், M-style காக்பிட் உடன் ஆம்பியன்ட் லைட்டிங், பனோரோமிக் சன்ரூஃப் கொண்டுள்ளது.

எக்ஸ்3 எம் காரில் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட “ட்வின்பவர் டர்போ” 3.0-லிட்டர் இன்லைன் வி6 பெட்ரோல்  480 ஹெச்பி ஆற்றலையும், 600 என்எம் முறுக்குவிசையையும் கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ X3 M எஸ்யூவி காரில் 0-100 கிமீ வேகம் 4.2 விநாடிகளிலும் மற்றும் மணிக்கு 250 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ எக்ஸ் 3 எம் நான்கு சக்கரங்களுக்கும் பவரை எடுத்துச் செல்ல 8-ஸ்பீட் எம் ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் உடன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

Web title : BMW X3 M launched at Rs 99.9 lakh

Exit mobile version