₹1.33 கோடியில் பிஎம்டபிள்யூ X7 சிக்னேச்சர் எடிசன் விற்பனைக்கு வெளியானது

Bmw X7 signature edition

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற X7 காரின் அடிப்படையில் சிக்னேச்சர் எடிசனை விற்பனைக்கு ரூ.1,33,00,000 வெளியிட்டுள்ள இந்த பதிப்பு குறைந்த எண்ணிக்கையில் மட்டும் டெலிவரி வழங்க உள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற xDrive40i வேரியண்டின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சம் வரை கூடுதலான விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் தான்சானைட் நீலம் மற்றும் டிராவிட் கிரே என இரு நிறங்களுடன் சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பாக கிரைஸ்டல் கட்டிங் கிளாஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறத்திலும் எல்இடி டெயில்லைட் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

இன்டீரியரில் சிறிய அளவிலான மாற்றங்களில் ஒன்றாக லெதர் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி இந்த மாடலிலும் வழக்கமான வசதிகள் தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 381 hp பவர் மற்றும்  502Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் AWD ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

Exit mobile version