Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
bs6 hyundai venue : பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை அறிவிக்கப்பட்டது

பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை அறிவிக்கப்பட்டது

hyundai venue suv

வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி கார் ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.51,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முந்தைய பிஎஸ்4 மாடலில் இடம்பெற்றிருந்த 1.4 லிட்டர் டீசல் என்ஜினுக்கு பதிலாக கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்).

புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

மேலும் பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடல்களில் கூடுதலாக சில வசதிகள் மற்றும் வேரியண்ட்டை பெறுகின்றது. புதிய 1.0 பெட்ரோல் வேரியண்ட் SX+ DCT டூயல் டோன் மற்றும் SX Option MT டூயல் டோன் பெற்றுள்ளது.

BS6 Hyundai Venue Price list

Petrol:

Hyundai Venue 1.2 MT E: ரூ. 6.70 லட்சம்

Hyundai Venue 1.2 MT S: ரூ. 7.40 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo MT S: ரூ. 8.46 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo DCT S: ரூ. 9.60 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo MT SX: ரூ. 9.79 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo MT SX Dual Tone: ரூ. 9.94 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo MT SX (O): ரூ. 10.85 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo MT SX (O) Dual Tone: 10.95 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo DCT SX Plus: ரூ. 11.35 லட்சம்

Hyundai Venue 1.0 Turbo DCT SX Plus Dual Tone: ரூ. 11.50 லட்சம்

Diesel:

Hyundai Venue 1.5 E: ரூ. 8.09 லட்சம்

Hyundai Venue 1.5 S: ரூ. 9.00 லட்சம்

Hyundai Venue 1.5 SX: ரூ. 9.99 லட்சம்

Hyundai Venue 1.5 SX Dual Tone: ரூ. 10.27 லட்சம்

Hyundai Venue 1.5 SX (O): ரூ. 11.39 லட்சம்

Hyundai Venue 1.5 SX (O) Dual Tone: ரூ. 11.49 லட்சம்

Exit mobile version