ரூ.72,000 விலை குறைக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 விபரம்

மஹிந்திரா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி300 காரின் விலையை அதிகபட்சமாக ரூ.72,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. சில டீசல் வேரியண்டுகளின் விலை ரூ.1000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற எக்ஸ்யூவி 300 காரில் உள்ள பெட்ரோல் மாடலின் W8 (O) அதிகபட்சமாக ரூ.72,000, W8 வேரியண்ட் ரூ.70,000, W6 வேரியண்ட் ரூ.17,000 மற்றும் W4 வேரியண்ட்  ரூ.35,000 என குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், டீசல் என்ஜின் பெற்ற வேரியண்டுகளில் W8 (O), W8 (O) AT வேரியண்ட் ரூ.39,000, W8, W8 AT என இரண்டும் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டு, W6, W4 முறையே ரூ.20,000, மற்றும் ரூ.1,000 என உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 எக்ஸ்யூவி 300 விலை பட்டியல்

W4 Petrol – ரூ. 7.95 லட்சம்

W6 Petrol – ரூ. 8.98 லட்சம்

W8 Petrol – ரூ. 9.90 லட்சம்

W8 Option Petrol – ரூ. 10.97 லட்சம்

W4 Diesel – ரூ. 8.70 லட்சம்

W6 Diesel – ரூ. 9.70 லட்சம்

W8 Diesel – ரூ. 10.75 லட்சம்

W8 (O) Diesel – ரூ. 11.75 லட்சம்

*All prices ex-showroom

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற வென்யூ, ஈக்கோஸ்போர்ட், விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளுகின்றது. இது தவிர விற்பனைக்கு வரவுள்ள சோனெட் எஸ்யூவிக்கும் போட்டியாக உள்ளது.