ரூ.8.49 லட்சத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

048cf bs6 renault duster

பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு ரூபாய் 8.49 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் நீக்கப்பட்டு, கூடுதலாக சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கைவிடப்பட்டுள்ளது. எனவே, இப்போது முன் வீல் டிரைவ் சிஸ்ட்த்தை மட்டும் பெற்றுள்ளது.

106 hp பவர், 142 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற உள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 156hp மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷன் இடம்பெற உள்ளது. இந்த என்ஜின் பெற்ற மாடலின் விலை அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 ரெனோ டஸ்ட்டர் விலை

டஸ்ட்டர் RXE – ரூ.8.49 லட்சம்

டஸ்ட்டர் RXS – ரூ.9.29 லட்சம்

டஸ்ட்டர் RXZ – ரூ.9.99 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

 

Exit mobile version