Automobile Tamilan

W16 என்ஜினை பெற்ற இறுதி புகாட்டி சிரோன் L’Ultime ஹைப்பர் கார்

Bugatti Chiron L Ultime side

கடந்த 2016 ஆம் ஆண்டு புகாட்டி நிறுவனம் வெளியிட்ட சிரோன்சூப்பர் ஸ்போர்ட் ஹைப்பர் காரின் L’Ultime என்ற பெயரில் W16 என்ஜின் பெற்ற 500வது மாடல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 500 மாடல்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட சிரோன் மாடல் பல்வேறு சிறப்பு எடிசன்கள் சூப்பர் ஸ்போர்ட், ஸ்போர்ட்  என மாறுபட்ட பெயர்களில்  கிடைத்து வந்தது.

சிரோன் வெற்றியை தொடர்ந்து அடுத்த சூப்பர் காரை புகாட்டி நிறுவனம் சில வாரங்களுக்குள் புதிய V16 ஹைபிரிட் என்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்ய உள்ளது.

இறுதியாக தயாரிக்கப்பட்ட சிரோன் எல்’அல்டைம் சூப்பர் ஸ்போர்ட்டின் காரில் குவாட்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட W16 என்ஜின் பெற்று அதிகபட்சமாக 1,479 bhp மற்றும் 1,599 Nm டார்க் வழங்குகின்றது.

காரின் பாடியில் பல்வேறு இடங்களில் கையால் எழுதப்பட்ட எண் ‘500’  ஆனது வீல் கப் மற்றும் பின்புற இறக்கை, மற்றும் என்ஜின் மேற்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கதவில் சிரோன் சாதித்த இடங்களின்  பெயர்கள் உள்ளன.

பிரத்தியேகமான அட்லான்டிக் ப்ளூ நிறத்தை பெற்றுள்ள சிரோன் எல் அல்டைம் இன்டிரியரில் ப்ளூ லெதர் அப்ஹோல்ஸ்டரி, ப்ளூ கார்பன் மேட் இன்ஷர்ட்டுகள் மற்றும் பிரெஞ்ச் ரேசிங் ப்ளூ பெற்றதாக உள்ளது. தனித்துவமான L’Ultime காரில் பல்வேறு இடங்களில் 500 எண் பொறிக்கப்பட்டுள்ளது.

Bugatti Final Chiron L’Ultime image gallery

 

Exit mobile version