Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மணிக்கு 445 கிமீ வேகம்.., புகாட்டி டூர்பில்லியன் ஹைப்பர்-ஜிடி அறிமுகம்

by Automobile Tamilan Team
22 June 2024, 7:54 am
in Car News
0
ShareTweetSend

Bugatti Tourbillon

புகாட்டியின் சிரோன் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள புதிய டூர்பில்லியன் ஹைப்பர்-ஜிடி  (Bugatti Tourbillon) காரின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 250 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக 1800hp பவர் வெளிப்படுத்தும் 8.3 லிட்டர் V16 ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான கார்

உலகின் மிக அதிக வேகமான கார் என்ற பெருமையை பெற்றுள்ள SSC Tuatara பெற்று மணிக்கு 532.69 Km/hrஆக உள்ள நிலையில், தற்பொழுது வந்துள்ள டூர்பில்லியன் ஹைப்பர்-ஜிடி பற்றி புகாட்டியின் தலைவர் குறிப்பிடுகையில் ஆரம்பநிலை அதிகபட்ச வேகம் மட்டுமே 445 கிமீ ஆகும் ஆனால் உண்மையான அதிகபட்ச வேகம் டிராக் மாடல்கள் எட்டி மீண்டும் உலகின் அதிகவேகமான கார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட பொழுது சிரோன் அதிகபட்ச வேகம் மணிக்கு 420 கிமீ ஆக இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் மணிக்கு 480 கிமீ எட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, டூர்பில்லியன் அதிகவேகமான மற்றும் அதி விரைவான கார் என்ற பட்டத்தை பெற வாயுப்புள்ளது.

Tourbillon hyper-GT Engine

முந்தைய சிரோன் காரில் இடம்பெற்றிருந்த W16 குவாட் மோட்டார் என்ஜின் நீக்கப்பட்டு புதிய 8.3 லிட்டர் V16 PHEV என்ஜின் மூன்று எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தி அதிகபட்சமாக 1800 HP பவர் வெளிப்படுத்துவதுடன், உலகில் உள்ள கார்களில் மிக விரைவாக 0-100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு 2.0 நொடிகளும், 0-200 கிமீ வேகத்தை எட்டு 5.0 நொடிகளுக்கு குறைவான நேரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளக் இன் ஹைபிரிட் காரில் உள்ள  25kWh பேட்டரி கொண்டு மட்டும் பயணித்தால் முழுமையான சார்ஜில் 60 கிமீ பயணிக்கும் திறனை பெற்றிருக்கின்றது. 800V ஆர்க்கிடெச்சர் அமைப்பினை பெறுகின்ற இந்த மாடல் 0-80 % சார்ஜிங் பெற 12 நிமிடங்கள் போதுமானதாகும்.

Bugatti Tourbillon dashboard

புகாட்டி டூர்பில்லியன் டிசைன்

முந்தைய வெய்ரோன் மற்றும் சிரோன் சூப்பர் கார்களின் அடிப்படையிலான டிசைனை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டூர்பில்லியன் காரில் தனது குதிரை லாடம் போன்ற பாரம்பரிய கிரில் அமைப்பினை பெற்று புகாட்டியின் லோகோ மத்தியில் உள்ளது.

1995 கிலோ எடை கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெறுகின்ற டூர்பில்லியன் ஹைப்பர் ஜிடியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 400 கிமீ பயணிக்கும் திறனை இலகுவாக எட்டுவதற்கு ஏற்ற (aerodynamics) காற்றியக்கவியல் மட்டுமல்லாமல், காரின் வெப்ப இயக்கவியலுக்கும் (thermodynamics) ஆகியவற்றை உறுதிப்படுத்த, வாகனத்தின் பாடி மற்றும் காக்பிட் சிறப்பான வகையில் குளுமையை நன்றாக வழங்கும்,” என புகாட்டி தெரிவித்துள்ளது.

இன்டிரியரில் தனது பாரம்பரிய வடிவங்களை பெற்றிருந்தாலும் நவீன தலைமுறைக்கு ஏற்ற எலக்ட்ரானிக் சார்ந்த அம்சங்கள், டிஜிட்டல் சார்ந்த கிளஸ்ட்டர் சார்ந்த ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றது.

ரிமாக் (Rimac) கீழ் செயல்படுகின்ற புகாட்டி தனது கார்களில் முதன்முறையாக மிகவும் விலை உயர்ந்த மாடலாக டூர் பில்லியன் சூப்பர் ஹைப்பர் காரின் விலை GBP 3.2 மில்லியன் (தோராயமாக இந்திய மதிப்பில் 34 கோடி வரிகள் இல்லாமல்) ஆகும்.

Bugatti Tourbillion V16 Hybrid Image Gallery

Bugatti Tourbillon side view
Bugatti Tourbillon
Bugatti Tourbillon car
Bugatti Tourbillon dashboard
Bugatti Tourbillon digital cluster
Bugatti Tourbillon
Bugatti Tourbillon engine
Bugatti Tourbillon logo
Bugatti Tourbillon rear view
Bugatti Tourbillon top view
Bugatti Tourbillon top view 1

 

Related Motor News

W16 என்ஜினை பெற்ற இறுதி புகாட்டி சிரோன் L’Ultime ஹைப்பர் கார்

Tags: BugattiBugatti Tourbillon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan