521 கிமீ ரேஞ்சு.., பிஒய்டி ஆட்டோ 3 (BYD Atto 3) மின்சார எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் பரவலாக மின்சார கார் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீனாவை தலைமையிடமாக கொண்ட பிஒய்டி ஆட்டோ 3 (Build Your Dreams Atto 3) மின்சார காரின் விலை ரூபாய் 33.99 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

BYD ஆட்டோ 3 மாடல் இந்திய சந்தையில் எம்ஜி ZS EV விலை ரூ.22.5 லட்சம் முதல் ரூ.26.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை ரூ.23.84 லட்சம் ஆக விளங்கும் கார்களுக்கு போட்டியாகவும்,  கூடுதலாக ரூ.18.34 லட்சம் முதல் ரூ.19.34 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்ற நெக்ஸான் EV Max மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

BYD Atto 3

Atto 3 காரில் முன் ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மின்சார மோட்டார் வாயிலாக பவர் அதிகபட்சமாக 201hp மற்றும் 310Nm டார்பக் உருவாக்குகிறது. இந்த மின்சார எஸ்யூவி ஆனது 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 7.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். 60.48kWh பிளேட் பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டு ARAI சான்றிதழ்படி 521km வரம்பையும் மற்றும் ரிஜெனேரேட்டிவ் பிரேக்கிங்கையும் வழங்குகிறது.

Atto 3 காரின் பேட்டரி பேக், டைப் 2 (7kW) AC சார்ஜரைப் பயன்படுத்தி தோராயமாக 10 மணிநேரத்திலும், 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 50 நிமிடங்களிலும் (0 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை) சார்ஜ் செய்யப்படலாம். இந்நிறுவனம் 7kW ஹோம் சார்ஜர் மற்றும் 3kW போர்ட்டபிள் சார்ஜிங் பாக்ஸை வழங்குகிறது.

Atto 3 ஆனது 3.3kW மின் உற்பத்தி மூலம் மற்ற மின் சாதனங்களுக்கு ஆற்றலை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக வீட்டின் பயன்பாடுகளுக்கு கூட பெற்றுக் கொள்ளலாம்.

மிக நேர்த்தியாக்கட்டமைக்கப்பட்டுள்ள பிஒய்டி ஆட்டோ 3 மாடலில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இரு வண்ணத்திலான பம்பர், சில்வர் நிற ஸ்கிட் பிளேட் உடன் வந்துள்ளது. பக்கவாட்டில் கருப்பு நிற ஆர்ச்சுடன் 18 அங்குல டூயல் டோன் ஸ்டைலிஷான அலாய் வீல் வழங்கப்பட்டு, பின்புறத்திலும் டூயல் டோன் பம்பர் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் கொடுக்கப்படுடள்ளது.

இன்டிரியரில் மிக நேர்த்தியான அமைப்புடன் டேஸ்போர்டின் மையத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்ட்டிவ் வசதிகளை வழங்கும் 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் பவர் மூலம் இயங்கும் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள் மற்றும் பல வண்ண சுற்றுப்புற விளக்குகள். ஆட்டோ 3 காரின் பாதுகாப்பு அம்சங்களில் ADAS தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, ABS, ESC, டிராக்‌ஷன் கட்டுப்பாடு, மலை இறங்கு கட்டுப்பாடு மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.

50,000 ரூபாய்க்கு SUV அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து Atto 3 க்கான முன்பதிவுகளை BYD மேற்க்கொண்டு வருகின்றது. இதுவரை 1,500 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகம் ஜனவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கலாம்.

 

 

Exit mobile version