இந்தியாவில் BYD சீல் எலக்ட்ரிக் கார் விநியோகம் துவக்கம்

BYD சீல் எலக்ட்ரிக் கார்

இந்தியாவில் BYD Seal எலக்ட்ரிக் செடான் காரின் விநியோகத்தை தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக 200 கார்களை சென்னை, ஹைதராபாத் பெங்களூரு மற்றும் டெல்லி NCR, கொச்சி உள்ளிட்ட முன்னணி மெட்ரோ நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது.

சீல் எலக்ட்ரிக் ரூபாய் 41 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த மாடலில் அதிகபட்ச டாப் வேரியண்ட் ரூபாய் 53 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக 1.25 லட்சம் புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்பொழுது வரை 1,000க்கு அதிகமான முன்பதிவுகள் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் e6 எம்பிவி மற்றும் Atto 3 என இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் மூன்றாவது மாடலாக சீல் மூன்று விதமான வகைகளில் கிடைக்கின்றது.

மேலும் படிக்க –  முதல் பிஓய்டி பிக்கப் டிரக் ஷார்க் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Exit mobile version