சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டும் பெற்றுள்ளது.
Citroen Aircross BNCAP – வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 32-க்கு 27.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்பாக இந்நிறுவனத்தின் 4 ஸ்டார் பாசால்ட் எஸ்யூவி மாடலின் சோதனையின் பொழுது பெறப்பட்ட மதிப்பெண்ணை விட வெறும் 0.86 புள்ளிகள் மட்டுமே அதிகம், அதே நேரத்தில் ஒப்பீடுகையில் மற்ற போட்டி நிறுவனங்களில் உள்ள வயது வந்தோர் பாதுகாப்பில் 29 புள்ளிகளுக்கு கூடுதலாகவே பெற்றுள்ளன, ஆனால் ஏர்கிராஸ் 5 நட்சத்திரம் மதிப்பீட்டை பார்டரில் மட்டுமே பாஸ் செய்துள்ளதை கவனித்தில் கொள்ள வேண்டும்.
பக்கவாட்டு மோதல் சோதனையில், இந்தக் கார் 16-க்கு 16 என முழுப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது, பக்கவாட்டு விபத்துகளில் பயணிகளுக்குச் சிறப்பான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிட்ரோயன் ஏர்கிராஸ் கார் விபத்துக்குள்ளான பிறகும், பயணிகளின் இருக்கை இருக்கும் பகுதி உறுதியாகவும் (Stable), மேலும் கூடுதலான அழுத்தங்களைத் தாங்கும் வலிமையுடனும் இருப்பதாகச் சோதனை முடிவுகள் காட்டுகின்றன.
குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங் ?
குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாக BNCAP-ல் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 49-க்கு வெறும் 40.00 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
விபத்தின்போது குழந்தை இருக்கையில் இருந்த 18 மாதக் குழந்தை மற்றும் 3 வயதுக் குழந்தை டம்மிகள் முழுப் பாதுகாப்பைப் பெற்றன. மேலும், குழந்தை இருக்கைகளை (ISOFIX/i-Size) காரில் பொருத்துவது மிக எளிதாக இருந்தது.
ஆனால் 4 நட்சத்திரத்திற்குக் காரணம்:
மோதல் சோதனைகள் சிறப்பாக இருந்தாலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை வழங்குவது குறித்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் சில குறிப்பிட்ட மதிப்பீட்டுப் பகுதிகளில் (Vehicle Assessment Score) பெற வேண்டிய 13 புள்ளிகளுக்கு வெறும் 4 புள்ளிகளைப் பெற்றதால், மொத்தமாக 4 நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.