Automobile Tamilan

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

citroen basalt fr

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்டீரியர் தொடர்பான டீசரில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு கிடைத்துள்ளது.

பஸால்ட்டில் 110 hp பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம்.

Citroen Basalt

டாடா கர்வ் கூபே மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ள பஸால்ட்டின் மற்ற போட்டியாளர்களாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

C3 ஏர்கிராஸ் மாடலில் உள்ளதை போன்ற பஸால்ட்டின் எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் ஹெட்லைட் அமைந்துள்ளது. உட்புறம் முன் மற்றும் பின்பக்க அமர்பவர்களுக்கு ஆர்ம்ரெஸ்ட்களை மேம்படுத்துகிறது. ஹெட்ரெஸ்ட்களுக்கு பக்க ஆதரவை வழங்குகிறது. பின்புற ஆர்ம்ரெஸ்டில் ஃபோன் ஹோல்டர் ஸ்லாட்டும் கிடைக்கிறது.

வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்ற 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் ADAS போன்ற பாதுகாப்பு வசதிகளும் பெறக்கூடும்.

சிட்ரன் பஸால்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.11 லட்சத்தில் துவங்கலாம்.

 

Exit mobile version