சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி சர்வதேச அளவில் 7 இருக்கைகளை பெற்ற சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற c3 மற்றும் ec3 காரை அடிப்படையாக கொண்ட மாடலாகும்.

இந்தியாவில் சந்தையில் கிடைக்கின்ற B பிரிவு எஸ்யூவி கார்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Citroen C3 Aircross

சிட்ரோன் நிறுவனத்தின் C3 காரின் அடிப்படையிலான ஸ்டைலிங் அம்சங்களை பெற உள்ள சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி வாகனம் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டிருக்கும். இரு பிரிவுகளை பெற்ற ஹெட்லைட் செட் அப், கிரில் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில்-லேம்ப்கள் போன்ற வடிவமைப்பு அம்சங்கள் விற்பனையில் உள்ள c3 போன்றே அமைந்திருக்கலாம்.

7 இருக்கைகள் பெற்ற சி3 ஏர்க்ராஸ் காரில் இடம்பெற உள்ள அனைத்து இன்டிரியர் சார்ந்த அம்சங்கள் டேஸ்போர்டு உட்பட அனைத்தும் சி3 காரில் இருந்து பெற்றிருக்கும்.

விற்பனையில் உள்ள C3 எஸ்யூவி காரில் 110PS 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் அல்லது சற்று கூடுதலான 130PS வெளிப்படுத்தலாம். ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வரக்கூடும்.

ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி வெளியாகும்.

Exit mobile version