Automobile Tamilan

மூன்று கார்களில் டார்க் எடிசனை வெளியிடும் சிட்ரோன்

citroen dark edition

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில், சிட்ரோன் நிறுவனமும் தனது C3, ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட் கூபே என மூன்று மாடல்களிலும் டார்க் எடிசன் என்ற பெயரில் கருமை நிறத்தை பெற்ற மாடல்களை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது.

நிறத்தை தவிர பெரிதாக எந்த தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாடல்களின் எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்த கார்களில் C3, ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட்டில் 1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதலாக,  1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

டார்க் எடிசனில் பல்வேறு இன்டீரியர் மேம்பாடுகளை கொண்டு கருமை நிற லெதேரேட் இருக்கைகள், வெளிப்புறத்தில் கருப்பு நிற அலாய் வீல் பெற்றதாகவும் அமைந்திருக்கலாம்.

சமீபத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் மஹிந்திரா, எம்ஜி, டாடா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஹூண்டாய், ஹோண்டா மற்றும் டொயோட்டா நிறுவனங்களும் வெளியிட்டுள்ளது.

Exit mobile version