டட்சன் ரெடி-கோ 1.0L ஏஎம்டி முன்பதிவு தொடங்கியது

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டட்சன் இந்தியா , புதிய டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள நிசான் டட்சன் டீலர்கள் வாயிலாக முன்பதிவை தொடங்கியுள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 L ஏஎம்டி

ரெனோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற தொடக்க நிலை மாடலாக விளங்கும் க்விட அடிப்படையில் ஜூன் 2016ல் வெளியான ரெடிகோ ஆரம்பத்தில் 0.8 லிட்டர் எஞ்சின் கொண்டதாவும், அதன் பிறகு 1.0 லிட்டர் எஞ்சின் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்க தொடங்கியது.

க்விட் காரில் இடம்பெற்றிருக்கின்ற அதே 1.0 லிட்டர் எஞ்சின் i-SAT’ a.k.a. Intelligent Spark Automated Technology என்ற பெயரில் 1.0 லி மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்ற காரின் மைலேஜ் லிட்டருக்கு  22.5 கிமீ ஆகும்.

தற்போது நாடு முழுவதும் உள்ள டீலர்கள் வாயிலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற ஜனவரி 23, 2018 முதல் டெலிவரி தொடங்கப்பட வாய்ப்புள்ளது.