Categories: Car News

அதிக புகையை வெளியிட்டும் தனியார் வாகனங்களுக்கு டெல்லியில் தடை விதிப்பு?

இந்தியாவில் குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் முழுவதும் அடர்த்தியான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வாகனங்கள் வெளியிடும் புகைகளே ஆகும். டெல்லில் உள்ள காற்று மிகவும் நச்சு தன்மை உடையது என்று காற்று தர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த காற்று மாசு காரணமாக, பல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக புகையை வெளியிட்டும் தனியார் வாகனங்களுக்கு டெல்லியில் தடை விதிக்க ஆலோசித்து வருவதாக சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணாய தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் மற்றும் 10ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் தோராயமாக 40 லட்சம் வாகனங்கள் மேற்குறிய வகையை சேர்ந்த வாகனங்களாகும். இது தடை செய்ய அரசு பெரியளவிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.