சவாலான பிரிட்டன் ரோட்டில் பயணம் செய்த டிரைவர் இல்லாத ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

எதிர்காலத்தில் டிரைவர் இல்லாத கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில், சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் டிரைவர் இல்லாதாக கார்களை தயாரித்து சோதனை செய்து வருகின்றன.

சமீபத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிரைவர் இல்லாத காரை இன்னர் சிட்டி ரிங்கில் ரோட்டில் சோதனை செய்தது. பிரிட்டனின் அதிக போக்குவரத்து நெருக்கம் கொண்ட சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்கள் இந்த சாலையில் சிறப்பாக ஒட்டியது. மேலும் இந்த கார்கள் சரியான முறையில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்கு மாறி பயணம் செய்து போக்குவரத்துடன் இணைந்தது. இந்த கார் போக்குவரத்து நெருக்கமான சாலையிலும் 40 mph வேகத்தில் பயணம் செய்துள்ளது.

இந்த வாகனத்தின் செயல்திறன், பிரிட்டன் ஆட்டோடிரைவ் மூலம் வீடியோவாக காட்டப்பட்டது. இந்த நயுர்வனம் 26 மில்லியன் டாலர் அரசு நிதியுடன் இந்த திட்டத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்த கார் குறித்து ரேஞ்ச் ரோவர் நிறுவனம் தெரிவிக்கையில், இந்த கார் தற்போது மிகச்சரியாக பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. மேலும் இது டிராபிக் கண்ட்ரோல் லைட்கள், பாதசாரிகள், சைக்களில் பயணம் செய்பவர்கள் போன்ற அனைத்து தடைகளையும் கடந்து சென்றுள்ளது. இதுமட்டுமின்றி இந்த கார்கள் தானாகவே பார்க்கிங் இடங்களில் பார்க் செய்யும் திறனையும் பெற்றுள்ளது.

இந்த காரை உருவாக்கி இன்ஜினியர்கள் கார்களை மானிட்டர் செய்து, இதில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் சரியாக உள்ளதா என்பதையும் சோதனை செய்துள்ளனர். மேலும் இதில் பல்வேறு காம்பினேஷனில் கேமராக்கள், சென்சார்கள் பொருத்தியுள்ளனர். இது தற்போதைக்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கார்கள் குறித்து பேசிய ரேஞ்ச் ரோவர் நிறுவன உயர் அதிகாரி மார்க் கன்ட், இந்த கார்கள் மிகவும் சவாலான சூழ்நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இந்த காரில் பயணம் செய்து புதிய அனுபவத்தை பெற்று கொள்ளலாம் என்றார்.