₹ 6.24 கோடியில் ஃபெராரி 296 GTS விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபெராரி 296 GTS கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் காரின் விலை ₹ 6.24 கோடி (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 296 GTB மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.

296 GTB மாடலை போலவே என்ஜின் உட்பட அனைத்தும் பெற்றிருந்தாலும் கன்வெர்டெபிள் பாடி அமைப்பினை கொண்டுள்ள 296 GTS காரில் உள்ள மேற்கூறை 45 kmph வரை திறந்திருக்கும். மேலும் 14 விநாடிகளுக்குள் மூடிக்கொள்ளும்.

Ferrari 296 GTS

ஃபெராரி 296 GTS ஆனது 296 GTB காரில் உள்ள அதே 664hp பவர் வழங்கும், 3.0-லிட்டர் ட்வின்-டர்போ V6 பவர்டிரெய்னைப் பெறுகிறது. கூடுதலாக பின்புறத்தில் பொருத்தப்பட்ட 166hp மின்சார மோட்டாருடன் இணைந்த மொத்த பவர் 830hp மற்றும் 740Nm ஆக உள்ளது.

296 GTS கார் 0 முதல் 100kph வேகத்தை எட்டுவதற்கு 2.9 வினாடிகளில் போதுமானது. 296 ஜிடிஎஸ் 330KM/H வேகத்தில் செல்லும்.  காரில் உள்ள மின்சார மோட்டார் கொண்டு 296 ஜிடிபி மாடலை போலவே 25 கிமீ பயணிக்கலாம்.

ஃபெராரி 296 ஜிடிஎஸ் மேற்கூரை 45 கிமீ வேகத்தில் திறக்க அல்லது மூடுவதற்கு வெறும் 14 வினாடிகள் எடுக்கும். முன்பகுதியில் மடிந்து இரண்டு பிரிவுகளாக கொண்டுள்ளது.

Share